ஆம்பூர்:
ஆம்பூரில் காவல்துறையினர் ஞாயிறன்று இருசக்கர வாகனத்தைப் பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளித்த விவகாரத்தில் டிஎஸ்பி பிரவீன் குமார் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள் ளார்.
தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 12) முழு ஊரடங்கு அமலில் இருந்தது. ஆம்பூரில் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது முகிலன் (27) என்ற இளைஞர் இருசக்கர வாகனத்தில் வந்தார். போலீசார் இவரது வாகனத்தைப் பறிமுதல் செய்தனர். வாகனத் தைத் திருப்பித் தருமாறு அந்த இளைஞர் போலீஸாரைக் கேட்டுள்ளார்.திருப்பித் தர மறுத்ததால் உடனடியாக அந்த இளைஞர் அருகில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று மண்ணெண் ணெய் கேனுடன் திரும்பி வந்து போலீசார் கண்முன்னே தீக்குளித்துள்ளார். உடனடியாக இவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத் துவமனைக்கு அழைத்து வரப்பட்டார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக திருப் பத்தூர் மாவட்ட டிஎஸ்பி விஜயகுமார் மற்றும் வேலூர் சரக டிஐஜி ஆகிய இருவரும் சம்பந்தப்பட்ட இடத்தில் பணிபுரிந்த காவலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்த பிறகு அங்கு பணியாற்றிய காவலர்களைப் பணியிட மாற்றம் செய்தனர்.மேலும் விசாரணைக்கு மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி பிரவீன் குமார் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தரப்பிலிருந்து விசாரணை தொடங்கப் பட்டுள்ளது.