சென்னை, மே 12- ஜூன் மாதம் ஒன்றாம் தேதி முதல் பத்தாம் வகுப்பு தேர்வுகள் நடைபெறு மென பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,“கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக ஊரடங்கு அமலிலுள்ள காரணத்தினால் தடைப்பட்ட 10 ஆம் வகுப்பு தேர்வுகள் காலதாமதமாகின.
ஜூன் 1 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை 10 ஆம் வகுப்பு பொது தேர்வு நடை பெறும். சுகாதார துறையினரின் அறிவுறுத்த லின்படி, சமூக இடைவெளியுடன் தேர்வு நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வரு கின்றன. பள்ளி திறப்பு குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. தேர்வுகளை நடத்துவதில் மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டு உள்ளது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
10 ஆம் வகுப்பு தேர்வு அட்டவணை வருமாறு:
ஜூன் 1ஆம் தேதி மொழிப் பாடம், ஜூன் 3 ஆங்கிலம், ஜூன் 5 கணிதம், ஜூன் 6 விருப்ப மொழிப் பாடம், ஜூன் 8, அறிவியல், ஜூன் 10 சமூக அறிவியல் தேர்வுகள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.