திண்டுக்கல், மே 16- 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தினால் கொரோனா தொற்று பரவ வாய்ப்பு அதி கம் உள்ளது. எனவே தேர்வை ஒத்தி வைக்கக் கோரி மே 18-ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு இந்திய மாணவர் சங்கம் போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளது. இது தொடர்பாக திண்டுக்கல்லில் மாநி லச் செயலாளர் வீ.மாரியப்பன் செய்தி யாளர்களிடம் கூறியதாவது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஜூன் 1-ஆம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை நடை பெறும் என அறிவித்துள்ளார். கொரோனா அச்சத்தில் உறைந்து உள்ள இந்த சூழ லில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்து வது மாணவர்கள் மீது நடத்தக்கூடிய மிகப்பெரிய வன்முறையாக நாங்கள் கருது கிறோம்.
குறிப்பாக பெற்றோர்களும், மாண வர்களும் அச்சத்தில் இருக்கும் போது அந்த அச்சத்தை போக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உள்ளது. கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு தேர்வுகள் நடத்தப் படும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் சொல்கிறார். பள்ளிக்கல்வித்துறை அமை ச்சர் ஜூன் 1-ஆம் தேதி 10-ஆம் வகுப்புக்கு தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கிறார். ஒரே அரசாங்கத்தில் இரண்டு அமைச்சர் கள் வெவ்வேறு நிலைபாடு கொண்டுள்ள னர். இந்த தேர்வுக்காக போக்குவரத்து வசதிகள் செய்து தருவதாக அமைச்சர் சொல்லி உள்ளார். அனைத்து மாண வர்களும் தேர்வு எழுத ஏற்பாடு செய்வதாக அரசு கூறுகிறது. இதில் எங்களுக்கு நம் பிக்கை இல்லை. ஈரோடு மாவட்டம் பர்க் கூர் மலைப்பகுதியில் உள்ள அரசுப் பள்ளி யில் 10-ஆம் வகுப்பில் 25 மாணவர்கள் சேர்ந்திருந்தார்கள். இடை நிற்றல் காரண மாக 17 மாணவர்கள் தான் படித்தார்கள்.
அந்த 17 மாணவர்களில் 14 மாணவர் களுக்குத் தான் தேர்வு அனுமதி சீட்டு கிடைத்தது. அதில் நான்கு மாணவர்கள் இண்டர்னல் தேர்வு எழுதவில்லை. 10 மாணவர்கள் தான் தேர்வு எழுத உள்ள னர். அந்த பத்து மாணவர்களும் கரும்பு வெட்டும் தொழிலுக்குச் சென்றுவிட்டார் கள். இப்போது அந்த 10 மாணவர்கள் எங்கு உள்ளார்கள் என்பது யாருக்கும் தெரி யாது. மாணவர்களின் நிலை இப்படி இருக்க பள்ளிக்கல்வித்துறை தேர்வு நடத்தினால் கிராமப்புற, மலைக் கிராம மாணவர்கள் முற்றிலுமாக பாதிக்கப்படுவார்கள். சாதா ரண காலங்களைக் காட்டிலும் ஊரடங்கு காலத்தில் அதிக பேருந்துகளை இயக்க வேண்டிய கட்டாயம் அரசுக்கு உள்ளது.
பொதுத் தேர்வு நடத்தப்படும் பல பள்ளி களை கொரானா நிவாரணப் பணிக்காக சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மாநகராட்சி, நகராட்சி நிர்வாகங்கள் எடுத்துக் கொண்டன. இந்த பள்ளிகளை தூய் மைப்படுத்த எந்த ஏற்பாடும் நடைபெற வில்லை. டாஸ்மாக் டோக்கன்கள் கூட பள்ளிகளில் வழங்கப்பட்டன. வெளி மாநி லத் தொழிலாளர்கள் தங்க வைக்கப் பட்டன. மத்திய மனித வளத்துறை தமி ழகத்தில் உள்ள 6,500 பள்ளிகளில் தண்ணீர் வசதி, கழிப்பிட வசதிகள் இல்லை என்று சொல்லி உள்ளது. தண்ணீர் இல்லாத பள்ளிகளில் கை கழுவுவது, தனிமனித இடைவெளியைக் கடைபிடிப்பது என்பது சாத்தியமில்லை. ஆகவே அனைத்து பள்ளிகளிலும் கிருமிநாசினி தெளித்து சுத்தம் செய்த பிறகு தான் பரிட்சை நடத்த வேண்டும். 10-ஆம் வகுப்பு தேர்வு நடத்தினால் கொரானா நோய் சமூக பரவல் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு பள்ளியிலும் ஆயிரக்க ணக்கான மாணவர்கள் பங்கேற்பார்கள். கிட்டத்தட்ட 10 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதுவார்கள். நோய் தொற்று உள்ள ஒரு மாணவர், அல்லது ஆசிரியர் மூலமாக தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளது. எல்லோ ரும் முக கவசம் அணிந்து வர வேண்டும் என்று கூறுகிறது. அரசு. ஒரு முகக் கவ சத்தின் ஆயுட்காலம் ஏழு மணி நேரம். தமிழக அரசு மாணவர், பெற்றோர், ஆசிரி யர்களின் உயிரோடு விளையாடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்ற எங்கள் கோரிக்கையை ஏற்காமல் தனியார் பள்ளி களின் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி அரசு அவ சர கதியாக தேர்வு நடத்துவதை வன்மை யாகக் கண்டிக்கிறோம். இந்தக் கோரிக்கை களை வலியுறுத்தி வருகிற மே 18-ஆம் தேதி இந்திய மாணவர் சங்கம் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகங் கள் முன்பாக போராட்டங்ள் நடத்த உள்ளோம் என்றார. பேட்டியின் போது திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் முகேஷ், இந்திய ஜன நாயக வாலிபர் சங்க மாவட்டச் செயலா ளர் கே.ஆர்.பாலாஜி ஆகியோர் உடனி ருந்தனர்.