பொன்னமராவதி, ஜூன் 2- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமரா வதி அருகே உள்ள காட்டுப்பட்டியில் சுதந்திர போராட்ட வீரரும் முன்னாள் அமைச்ச ருமான ராமையாவின் 100-ஆவது பிறந்த நாள் விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. ராமையாவின் சொந்த ஊரான காட்டுப்பட்டில் நடைபெற்ற விழாவில் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர், சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் பெரியண்ணன் அரசு, திருமயம் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, முன்னாள் சட்டமன்ற உறுப்பி னர் ராம.சுப்புராம், அதிமுக புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் வைரமுத்து, வட்டாட்சியர் திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.