புதுக்கோட்டை, மே 18- புயல் காற்றில் சேதமடைந்த வாழைகளுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் புதுக்கோட்டை மாவட்டச் செய லாளர் எஸ்.பொன்னுச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கை: வங்கக் கடலில் உருவான ஆம்பன் புயலைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமையன்று புதுக்கோட்டை மாவட்டத்தில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இந்தக் காற்றில் ஆலங்குடி, கறம்பக்குடி தாலுகாக்களில் பயிரிடப்பட்டிருந்த ஆயிரக்கணக்கான ஏக்கர் வாழை மரங்கள் வேரோடு சாய்ந்தும், பாதியில் முறிந்து சேத மடைந்தன. இதனால் விவசாயிகள் மிகுந்த மனவேதனை அடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்க தமிழக அரசும் மாவட்ட நிர்hவகமும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.