tamilnadu

புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை கூட்டம்

புதுக்கோட்டை, ஏப்.28-வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக புயல் உருவாகி உள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. இதைதொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய புயல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து சென்னை வருவாய் நிர்வாக ஆணையருடன் காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் காவல்துறை, தீயணைப்புத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்பில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணி குறித்து அறிவுறுத்தப்பட்டது. மாவட்டத்தில் நிலைமையினை கண்காணித்து அதுகுறித்த அறிக்கையினை தினமும் ஆட்சியரகத்தில் செயல்படும் பேரிடர் மேலாண்மை அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டது.