tamilnadu

img

ஸ்ரீ வெங்கடேஸ்வரா பள்ளி விளையாட்டு விழா

புதுக்கோட்டை, ஜன.26- புதுக்கோட்டை திருக்கோகர்ணம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் விளையாட்டுவிழா சனிக்கிழமை புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது. விழா விற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர் தங்கம் மூர்த்தி தலைமை வகித்தார். மாவட்ட நில அபகரிப்பு பிரிவு காவல் துணைக் கண்கா ணிப்பாளர் தினேஷ்குமார், புதுக்கோட்டை நகர காவல் ஆய்வாளர் பரவாசுதேவன், மாவட்ட விளையாட்டு அலுவலர் மாலதி ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கி வாழ்த்துரை வழங்கினர். விழாவில் மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயம், கபடி தடையோட்டம் ஆகி யனவும் பெற்றோர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கான உரியடித்தல், இளவட்டக்கல் தூக்குதல், கிட்டிப்புல், பரமபதம், பல்லாங் குழி, தாயம் ஆகிய விளையாட்டுக்கள் நிகழ்த்தப்பட்டன. நிறைவாக ஆசிரியர் சுமதி நன்றி கூறினார்.