tamilnadu

புதுக்கோட்டை , திருவாரூர் முக்கிய செய்திகள்

சாலை விபத்தில் புதுக்கோட்டை  ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பலி
புதுக்கோட்டை, ஜூலை 17-  புதுக்கோட்டையில் புதன்கிழமை நடைபெற்ற சாலை விபத்தில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உயிரி ழந்தார். புதுக்கோட்டை மச்சுவாடியைச் சேர்ந்தவர் திருஞானம் (59). இவர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் துணை மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி பாலசந்திரா(57). புதுக்கோட்டை ஆட்சியர் அலு வலகத்தில் ஆட்சியரின் நேர்முக உதவியாளராக (கணக்கி யல்) பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் திருஞானம், பாலசந்திரா ஆகிய இரு வரும் புதுக்கோட்டை நகரில் செவ்வாய்க்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர். அண்ணா சிலை அருகே சென்ற இவர்களது மோட்டார் சைக்கிள் மீது, எதிரே வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள் மோதியது. இதில், திருஞானம், பாலசந்திரா ஆகிய இருவரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். அதில், சிகிச்சை பலனின்றி பாலசந்திரா செவ்வா யன்று உயிரிழந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை நகரக் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

பயிர்க் காப்பீட்டு தொகை வழங்க கோரி வங்கி மேலாளரிடம் விவசாயிகள் சங்கம் மனு
குடவாசல், ஜூலை 17- பாரத ஸ்டேட் வங்கியின் குடவாசல் கிளை மேலாளரிடம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர் கோரிக்கை மனு அளித்தார். மனுவில் 16-17-ம் ஆண்டில் பயிர் காப்பீட்டு செய்த பயனாளி களுக்கு வர வேண்டிய பயிர் காப்பீட்டு நிலுவைத்தொகை மற்றும் பல மாதங்களாக ஏடிஎம், சிடிஎம், பாஸ் புக்கில் வரவு-செலவு பதிவு செய்யும் இயந்திரங்கள் பழுதடைந்த நிலையில் உள்ளன. இவைகளை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது. மனுவில் தெரிவிக்கப்பட்ட கோரிக்கைகளை உடனே ஆய்வு செய்து ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள குறைபாட்டை சீர் செய்ய வங்கி மேலாளர் உத்தரவிட்டார். அடுத்த சில மணி நேரங்களிலே ஏடிஎம் இயந்திரம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.  மேலும் சிடிஎம், பாஸ்புக்கில் வரவு-செலவு செய்யும் பதிவு எந்திரத்தையும் செயல்பாட்டுக்கு கொண்டு வர நட வடிக்கை எடுப்பதாகவும் இரண்டுக்கும் புதிய எந்திரம் வர உள்ளதாகவும் கூறினார்.  பயிர் இன்சூரன்ஸ் செய்த பயனாளிகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தகவல் கொடுத்து, விவசாயி களுக்கு பயிர் காப்பீட்டு தொகை கிடைக்க உரிய நட வடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.  வங்கி மேலாளரிடம் மனு கொடுக்கும் போது, விவசாயி கள் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் டி.ஜி.சேகர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தெற்கு ஒன்றியச் செய லாளர் ஆர்.லட்சுமி, ஒன்றியக் குழு உறுப்பினர் ஆர். இன்ப நாதன், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஏ.வி.சுப்பிரமணியன், தீக்கதிர் செய்தியாளர் நீதிராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

ஆரூரான் பாலிடெக்னிக்  கல்லூரியில் வகுப்புகள் தொடக்க விழா
மன்னார்குடி, ஜுலை 17- நன்னிலம் அருகே சொரக்குடியில் உள்ள ஆரூரான் பாலி டெக்னிக் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழா நடைபெற்றது.  13-வது முறையாக முதலாமாண்டு வகுப்புகள் தொடக்க விழாவுக்கு கல்வி அறக்கட்டளை தலைவர் டீ.கண்ணன் தலைமை வகித்தார். இந்தியன் வங்கியின் மண்டல மேலாளர் என்.ராஜா மணி, துணை மண்டல மேலாளர் எம்.செல்வ நாயகம், திருவாரூர் முதன்மை மேலாளர் எம்.ஆனந்தி ஆகி யோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வகுப்பு களை தொடங்கி வைத்தனர்.  இதில் ஆரூரான் கல்வி அறக்கட்டளைச் செயலர் ஏ.கலிய பெருமாள், பொருளாளர் ஆர்.கனகசபாபதி, உறுப்பினர்கள் ஏ.லட்சுமணன், எஸ்.என்.அருண்பிரசாத், எல்.கிருஷ்ண வேணி, கே.வரலட்சுமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். கல்லூரி முதல்வர் ஓ.விஜயகுமார் வரவேற்றார். முதலா மாண்டு முதுநிலை விரிவுரையாளர் என்.சீனிவாசமூர்த்தி நன்றி கூறினார். நிகழ்ச்சியை முதலாமாண்டு துறைத்தலைவர் டீ.நடராஜமூர்த்தி தொகுத்து வழங்கினார்.  நிகழ்ச்சியில் 2019-ல் நடைபெற்ற வாரியத் தேர்வில் அதிக அளவில் தேர்ச்சி சதவீதம் வழங்கிய விரிவுரையா ளர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.