பொன்னமராவதி, ஜன.30- புதுக்கோட்டை பொன்னமராவதியில் அப்துல் கலாம் எழுச்சி மன்றம் மற்றும் புமிற்றா லேண்டஸ் கேப் இந்தியா பிரைவேட் லிமிடெட் சார்பில் மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. பொன்னமராவதி போக்குவரத்து காவலர் தாஜ்ராஜ், காவலர் விமல் குமார், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவிகளுக்கு டிபன் பாக்ஸ், தண்ணீர் கேன் போன்ற பொருள்களை வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் ராஜா சந்திரன் முன்னிலை வகித்தார். மன்ற நிர்வாகி இரா.பாஸ்கர் இந்தியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.