tamilnadu

img

ஆட்டோ ஓட்டுநர்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கல்

திருச்சிராப்பள்ளி, ஜூலை 18- ஊரடங்கு அமலுக்கு வந்த நாள் முதல் அறம் மக்கள் நல சங்கம் சார்பில் தமிழகம் முழுவதும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக திருச்சி மன்னார்புரத்திலுள்ள எல்ஃபின் வளா கத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.  விழாவினை அறம் மக்கள் நல சங்கம் மாநில அமைப்புச் செயலாளர் பாதுஷா துவங்கி வைத்தார். அறம் மக்கள் நல சங்க நிறுவன தலைவர் டாக்டர் ராஜா, பொதுச் செயலாளர் ரமேஷ்குமார் ஆகியோர் இணைந்து அரிசி உள்ளிட்ட அத்தியா வசிய பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கினர். விழாவில் மாநில பொரு ளாளர் பாபு, மாநில துணைத் தலை வர்கள் சாகுல் ஹமீது, பால்ராஜ், இளங்கோ, மாநில இணை செயலாளர் அறிவுமணி, துணைச் செயலாளர்கள் ராஜப்பா, ராஜ சேகர் திருச்சி மாவட்ட தலைவர் ஆனந்த் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.