புதுக்கோட்டை, மார்ச் 10- விதிகளை மீறிப் வழங்கப்பட்ட பதவி உயர்வுப் பட்டிலை ரத்துசெய்ய வலியுறுத்தி புதுக் கோட்டையில் தமிழ்நாடு வரு வாய்த்துறை அலுவலர் சங்கத்தி னர் செவ்வய்க்கிழமை காத்திருக் கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் 36 முதுநிலை வருவாய் ஆய்வா ளர்களை பதவி உயர்வு மூலம் தற்காலிக துணை தாசில்தார்க ளாக மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு நியமனம் செய்தார். விதிகளின்படி வழங் கப்பட்ட இந்நியமனத்தை தமிழ் நாடு வருவாய்த்துறை அலு வலர் சங்கம் வரவேற்றது. இதற்கு ஒருதரப்பினர் எதிர்ப்புத் தெரி வித்தனர். இந்நிலையில், வருவாய் துறை நிர்வாக ஆணையரின் உத்த ரவுப்படி மேற்படி பதவி உயர்வை ரத்து செய்துவிட்டு புதிய பட்டி யலை கடந்த 3-ஆம் தேதி ஆட்சி யர் வெளியிட்டார். விதிகளை மீறிப் போடப்பட்ட துணை தாசில் தார் ஆணைகளை ரத்துசெய்து விட்டு பழைய பதவி உயர்வுப் பட்டிலை மீண்டும் வெளியிட வலி யுறுத்தி தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலர் சங்கத்தினர் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யர் அலுவலக வளாகத்தில் செவ் வாய்க்கிழமையன்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.ஜபாருல்லா தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவியரசு உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்றனர். காத்திருப்பு போராட் டத்தில் கலந்து கொண்ட வரு வாய்த்துறை அலுவலர்கள் அரசு விதிகளை மீறி போடப்பட்ட துணை தாசில்தார் ஆணைகளை ரத்து செய்ய வேண்டும் என முழக்கங்களை எழுப்பினர்.