tamilnadu

போலி ஆவணங்கள் தயாரித்து தனியார் நிதி நிறுவனம் கடன் மோசடி நடவடிக்கை எடுக்க சிபிஎம் வலியுறுத்தல்

பொன்னமராவதி, பிப்.18- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள ஜேஜே நகரில் பெங்களூ ரைச் சேர்ந்த கிராமின் கூட்டா என்ற தனியார் நிதி நிறுவனம் போலி ஆவ ணங்களின் மூலம் கடன் பெற்று மோசடி செய்திருப்பது அம்பலமாகியிருக்கி றது. இதுகுறித்து மேலைச்சிவபுரியைச் சேர்ந்த சிபிஎம் முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினர் கே.ராஜா, தொண்டீஸ்வரி ஆகியோர் பொன்னமராவதி காவல் நிலையத்தில் புகாரில் கூறியதாவது, பொன்னமராவதி ஜேஜே நகரில் இயங்கி வரும் கிராமின் கூட்டா என்கிற நிதி நிறுவனத்தில் இருந்து நாங்கள் கடன் பெற்றதாகவும் அதை திரும்ப செலுத்த வேண்டும் என தகவல் வந்தது. சம்பந்தப்பட்ட நிறுவனத்திலிருந்து எந்தவிதமான கடனும் பெறாத நிலை யில் இவ்வாறு தகவல் வந்ததும் சம்பந் தப்பட்ட நிதி நிறுவனத்தில் விசாரிக்கை யில் எங்களுடைய குடும்ப அட்டை மற்றும் வாக்காளர் அடையாள அட்டை களை வைத்து போலியான ஆவணங்க ளை உருவாக்கி அதில் அவர்களே கையொப்பமிட்டு கடன் தொகை பெற்றுள்ளனர். எனவே எங்களது பெயரில் போலி யான ஆவணங்கள் தயார் செய்து மோச டியில் ஈடுபட்ட மேலைச்சிவபுரி பெரிய சாமி மனைவி மகேஸ்வரி, லதா மற்றும் இவர்களுக்கு உடந்தையாக இருந்த கிராமின் கூட்டா நிதி நிறுவன ஊழியர் கள், மேலாளர் உள்ளிட்டோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இன்னும் எங்களைப் போல் வேறு நபர்களின் பெயர்கள் பேரிலும் இது போல் மோசடி யில் ஈடுபட்டதாக தெரிய வருகிறது. அதையும் முழுமையாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  மேலும் சம்பந்தப்பட்ட நிதி நிறுவ னம் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, இது தொடர்பாக முழு விசாரணை நடத்தி உண்மைகளை வெளியிட வேண்டும். தவறும் பட்சத்தில் மக்களை திரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என சிபிஎம் ஒன்றிய செயலாளர் என். பக்ருதீன் தெரிவித்து உள்ளார். புகார் பற்றி பொன்னமராவதி காவல்துறையி னர் விசாரித்து வருகின்றனர்.