tamilnadu

பொங்கல் விழா சிறப்புப் பேருந்துகள் கும்பகோணம் கோட்ட மேலாளர் அறிவிப்பு

புதுக்கோட்டை, ஜன.9- 2020 பெங்கல் பண்டி கையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போ க்குவரத்து கழக கும்பகோண கோட்ட மேலாண் இயக்குநர் பொன்முடி தெரிவித்துள்ளார்.  அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது: தமிழ்நாடு அரசு போக்கு வரத்து கழகம் கும்ப கோணம் கோட்டம் சார்பில்  ஜன.15 அன்று பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொது மக்கள் இடையூ றின்றி பயணம் செய்யும் வகையில் சென்னையில் இருந்து கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், நாகப்பட்டினம், காரைக்கால், வேளா ங்கண்ணி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம், திருச்சி, அரியலூர், ஜெ யங்கொண்டம், கரூர், புது க்கோட்டை, காரைக்குடி, இராமநாதபுரம், மதுரை ஆகிய இடங்களுக்கு ஜன.12  முதல் ஜன.14 வரை 3 நாட்கள் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.  இதேபோல திருச்சி யில் இருந்து தஞ்சாவூர், கும்பகோணம், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோ ட்டை, மதுரை ஆகிய இட ங்களுக்கும், மதுரை, கோய ம்புத்தூர், திருப்பூர் ஊர்களில் இருந்து திருச்சி, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஊர்களுக்கும் மற்றும் கும்பகோணம் போ க்குவரத்து கழக இயக்க பகுதிக்கு உட்பட்ட அனை த்து முக்கிய நகரங்களுக்கு ஜன.12 முதல் ஜன.14 வரை யிலும், அனைத்து முக்கிய  நகரங்களில் இருந்து அனை த்து நகர் பேருந்துகளும் பயணிகள் பயன்பாட்டிற்கு ஏற்ப இயக்க விரிவான ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.  மேலும் சென்னையில் இருந்து பொது மக்கள் எளி தாக பயணம் செய்ய  தற்காலிக பேருந்து நிலை யங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. கும்பகோணம், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, மன்னார்குடி, நன்னிலம், திருவையாறு தட பேருந்துகள் தாம்ப ரம், சானிடோரியம், அறிஞர் அண்ணா பேரு ந்து நிலையத்தில் இருந்தும்,  கரூர், திருச்சி, அரியலூர்,  செந்துறை, ஜெயங்கொ ண்டம், புதுக்கோட்டை, அற ந்தாங்கி, இராமநாதபுரம், இராமேஸ்வரம், பரமக்குடி, மதுரை, கமுதி, முதுகு ளத்தூர், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, மயி லாடுதுறை, சீர்காழி, திருவாரூர், திருத்து றைப்பூண்டி, வேதாரண்யம் பேருந்து நிலையத்தில் இரு ந்து இயக்கப்பட உள்ளன.  பொங்கல் பண்டிகை முடி ந்து, அவரவர் ஊர்களுக்கு செல்ல ஜன.15 முதல் ஜன.20  வரை சிறப்புப் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்ப ட்டு உள்ளது. இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.