பொன்னமராவதி, ஆக.22- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி கிழக்கு வருவாய் கிராமம் வேகுப்பட்டியில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு மாவட்ட வருவாய் அலு வலர் சாந்தி தலைமை வகித்தார். வட்டாட்சியர் பிர காஷ் வரவேற்றார். கோட்டாட்சியர் டெய்சிக்குமார், வட் டாட்சியர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்த னர். இதில் இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உத வித்தொகை உள்ளிட்டவை தொடர்பாக 267 மனு பொது மக்களிடமிருந்து பெறப்பட்டன. மேலும் உழவர் பாது காப்புத் திட்டத்தின் கீழ் விபத்து நிவாரணம், திருமண உதவித்தொகை என மொத்தம் 358 பயனாளிகளுக்கு ரூ24 லட்சத்தில் நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தனி வட்டாட்சியர் சங்கரகாமேஸ்வரன், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் வெள்ளைசாமி, வருவாய் ஆய்வா ளர் ஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர். தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் சேகர் நன்றி கூறினார்.