பொன்னமராவதி, ஏப்.13- புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் கோவனூரைச் சேர்ந்தவர் ஓட்டல் தொழிலாளி சங்கர்.இவர் சம்பவத்தன்று இருசக்கர வாகனத்தில் செவலூர் விலக்கில் சென்ற போது தனியார் பேருந்து மோதியது. இதில் படுகாயமடைந்த அவர், புதுக்கோட்டை அரசுமருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள், சங்கர் உயிரிழப்பிற்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். தனியார் பேருந்து ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்றுகோரி மறியலில் ஈடுபட்டனர். அங்கு வந்த அதிகாரிகள், இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிஅளித்தனர். இதையடுத்து மறியல் கைவிடப்பட்டது.