புதுக்கோட்டை, மே 18- எல்லாக் காலங்களிலும் நல்ல விலைக்கு விற்பனை யாகும் சம்மங்கி பூக்கள் கொரோனா காலத்தில் மதிப்பிழந்து குப்பையில் கொட்டப்படும் அவலம் நேர்ந்துள்ளது. திருமணம், கோவில் திரு விழாக்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு சம்மங்கிப் பூக்கள் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. நறுமணம் வீசுவதோடு, பளிச்சென்ற வெண்மை யுடன் அழகிய தோற்றத்து டன் காணப்படும். மேலும், குறைந்தது மூன்று நாட்க ளுக்கும் மேலாக வாடாமல் அப்படியே மலர்ச்சியுடன் இருக்கும். இதனால், திரு மணத்திற்கு சம்மங்கி மாலைகளை விரும்பி வாங்குவர். ஒரு கிலோ சம்மங்கி பூ ரூ. 500 தொடங்கி 2 ஆயிரம் ரூபாய் வரை விற்பனையா கும். இதனால், சாகுபடிக் கான செலவு கூடுதல் ஆனா லும் விவசாயிகள் விரும்பி சம்மங்கிகளை பயிரிடுவர்.
இப்படித் தான் இந்த வருடமும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள விவ சாயிகள் சம்மங்கி பூ சாகு படிகளை செய்திருந்தனர். குறிப்பாக புதுக்கோட்டை யை அடுத்த தெற்கு செட்டி யாபட்டி, காயாம்பாட்டி, மாஞ்சன்விடுத்தி, மழவ ராயன்பட்டி, ராயபட்டி, அரசரடிபட்டி உள்ளிட்ட கிரா மங்களில் நூற்றுக்கணக் கான ஏக்கரில் சம்மங்கி சாகு படி செய்யப்பட்டிருந்தன. இந்நிலையில், ஊரடங் கால் கோவில் திருவிழாக் களும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளும் முற்றிலுமாக தடைபட்டன.
இதனால், புதுக் கோட்டை பூ மார்க்கெட்டில் சம்மங்கிப் பூக்களை வாங்க ஆள் இல்லாமல் விவ சாயிகள் தவித்து வருகின்ற னர். கிலோவுக்கு இரண்டாயி ரம் ரூபாய் வரை விற்பனை யாகிய சம்மங்கிப் பூக்களை வெறும் பத்து ரூபாய்குக் கூட வாங்க ஆள் இல்லை. இதனால், விரக்திய டைந்த விவசாயிகள் தாங்கள் கொண்டு வந்த சம் மங்கிப் பூக்களை ரோட்டி லும், குப்பைத் தொட்டி யிலும் கொட்டி விட்டுச் சென்றனர். மேலும், பூ விவ சாயிகளுக்கு அரசு உரிய இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.