புதுக்கோட்டை, பிப்.26- புதுக்கோட்டை மாவட்டத்தில் தினந்தோ றும் 55,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்ப டுவதோடு, ஒவ்வொரு மாதமும் பால் உற்ப த்தியாளர்களுக்கு ரூ.5.5 கோடி வழங்கப்படு கிறது என்றார் ஆட்சியர் பி.உமாமகேஸ்வரி. மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு ஒன்றிய பால் பண்ணையினை பார்வையிட்டு அவர் தெரிவித்தது: 2014 ஆம் ஆண்டு முதல் இப்பண்ணையின் மூலம் பால் கொள்முதல் நாளொன்றுக்கு 19,000 லிட்டர் எனத் தொட ங்கி தற்பொழுது மாவட்டம் முழுவதும் 317 பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கங்க ளின் மூலம் சராசரியாக நாளொன்றுக்கு 55,000 லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வரு கிறது. 2018-19ல் 22,428 பால் கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் இருந்த நிலையில் தற்பொ ழுது 2019-20ல் 23,068 பால் கூட்டுறவு சங்க உறு ப்பினர்கள் உள்ளனர். இவர்கள் உற்பத்தி செய்யும் மொத்த பாலையும் கொள்முதல் செய்து பாலுக்கான பணம் 10 நாட்களுக்கு ஒரு முறை வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஒவ்வொரு மாதமும் பால் உற்பத்தியாளர்க ளுக்கு ரூ.5.5 கோடி வழங்குப்பட்டு வருகிறது. இதுதவிர கிடைக்கப்பெறும் லாபத்தில் ரூ.53 லட்சம் பங்குத் தொகையும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், பால் உற்பத்தியாளர்களுக்கு கால்நடை தீவனம் கிலோ ஒன்றுக்கு ரூ.3.20 -க்கும், தாது உப்பு கலவை ரூ.25-க்கும், பசும் தீவனம் ரூ.2.50க்கும் மானிய விலையில் வழங்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள பால் நுகர்வோரின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாளொன்றுக்கு 15,500 லிட்டர் பால் விற்பனை செய்யப்பட்டு வரு கிறது. உள்கட்டமைப்பை மேம்படுத்தும் வகையில் நபார்டு திட்டத்தின் கீழ் 17 பணிகள் ரூ.4.40 கோடி மதிப்பீட்டில் நடைபெற்ற வரு கிறது. ஆவின் மூலம் உற்பத்தி செய்யப்ப டும் தரமான நெய், வெண்ணெய், ஐஸ்கிரீம், பாதாம்பவுடர், பால்பவுடர், மைசூர்பா மற்றும் நறுமணப் பால் ஆகிய பல்வேறு பொருட்களை பொது மக்கள் வாங்கி பயன்ப டுத்துவதன் மூலம் கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமைகிறது எனத் தெரிவித்தார்.