tamilnadu

img

இறையூர் கிராமத்தின் குடிநீர் தொட்டியில் மலம் மிதந்த கொடூரம்!

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள இறையூர் கிராமத்தில், குடிநீர் தொட்டியில், மலம் மிதந்து கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சியில் இறையூர் கிராமத்தில், சிறுவர்கள் சிலருக்கு வாந்தி, வயிற்றுப் போக்கு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிறுவர்களை பரிசோதித்த மருத்துவர்கள், சுகாதாரமற்ற குடிநீரால் அப்பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதை அடுத்து, குடிநீர் தொட்டியில் ஏறி பார்த்தபோது, தண்ணீரில் மலம் மிதந்து கொண்டிருந்ததை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதையடுத்து போலீசாருக்கும், அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்தன், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ சின்னதுரை, அன்னவாசல் போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினர். பின்னர், குடிநீர்த் தேக்கத் தொட்டியிலிருந்த தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.