tamilnadu

விவசாயிகள் விரோத சட்டங்களை எதிர்த்து ஜூலை 27 வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றம்

புதுக்கோட்டை, ஜூலை 11- மத்திய அரசின் விவசாயி கள் விரோத சட்டங்களை எதி ர்த்து ஜூலை 27 அன்று  புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பல்லாயிரக்க ணக்கான வீடுகளில் கரு ப்புக்கொடி ஏற்றும் போரா ட்டம் நடைபெற உள்ளது. அகில இந்திய விவசா யிகள் போராட்ட ஒருங்கி ணைப்புக்குழுக் கூட்டம் புது க்கோட்டை இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விவசாயிகள் சங்க மாவ ட்டத் தலைவர் ஏ.ராமையன் தலைமை வகித்தார். விவசா யிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.சோமையா முன்னிலை வகித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் மு.மாதவன், விவசாயத் தொழிலாளர் சங்க மாநில பொருளாளர் எஸ்.சங்கர் ஆகியோர் பேசினர். மத்திய அரசின் விவ சாயிகள் விரோத சட்ட ங்களை எதிர்த்தும், கார்ப்ப ரேட் ஆதரவுக் கொள்கை களைத் திரும்பப்பெற வலி யுறுத்தியும் தமிழகம் முழுவ தும் ஒருகோடி கையெழுத்து  இயக்கம் நடைபெற உள்ளது. இதில் புதுக்கோ ட்டை மாவட்டத்திலிருந்து ஒரு லட்சம் கையெழுத்தை விவசாயிகள் மற்றும் பொது மக்களிடம் பெறுவது, ஜூலை 27 அன்று வீடுகள் தோறும் கருப்புக்கொடி ஏற்றும் போ ராட்டம் நடைபெற உள்ளது.  புதுக்கோட்டை மாவ ட்டத்தில் பல்லாயிரக்க ணக்கான வீடுகளில் கருப்புக் கொடியேற்றுவது. மக்கள் கூடும் இடங்களில் ஆர்ப்பா ட்டங்களை நடத்துவது என  கூட்டத்தில் தீர்மானிக்கப் பட்டது.