tamilnadu

img

புதுகையில் கண் தான வார விழா

புதுக்கோட்டை, ஆக.29- புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை கண்தான வார விழா நடைபெற்றது. கண்ணப்பநாயனார் கண்தான பிரச்சார மைய நிர்வாகி சி.கோவிந்தராஜன் பேசுகையில், எதிர்பாராத விபத்துகளாலும், உயிர்ச்சத்துக் குறைவினாலும் சிலருக்கு பார்வையிழப்பு ஏற்படுகிறது. ஒருவர் இறந்துவிட்டார் அவரது கண்கள் 6 மணிநேரம் உயிருடன் இருக்கும். அதற்குள் அவரிடமிருந்து கண்ணை எடுத்து அதிலுள்ள கார்ளியாவைப் பொருத்தினால் பார்வையில்லாதவர்களுக்கு பார்வை கிடைத்துவிடும். இதுவரை கண் தான படிவங்களை 20,000 ஆயிரம் பேருக்கு மேல் வாங்கி மாவட்ட ஆட்சியரிடம் வழங்கி உள்ளோம். நீங்களும் கண்தானம் செய்ய முன்வர வேண்டும் என்றார்.  விழாவிற்கு தலைமை ஆசிரியர் கோ.அமுதா தலைமை வகித்தார். பேலஸ்சிட்டி ரோட்டரி சங்கத் தலைவர் டி.ரவிச்சந்திரன் வரவேற்றார். கண்தான படிவங்கள் அதிக அளவில் பெற்றதைப் பாராட்டி கோவிந்தராஜன் கவுரவிக்கப்பட்டார். கண்தானம் குறித்து சிறப்பாக உரை நிகழ்த்திய மாணவிகளும் கவுரவிக்கப்பட்டனர். அன்பு தனபால் நன்றி கூறினார்.