கரூர், நவ.1- ஊழல் விழிப்புணர்வு வார விழாவையொட்டி இந்திய எரிசக்தி துறை, இந்து தின நாளிதழ் மற்றும் பரணி பார்க் பள்ளி சார்பாக ஊழல் விழிப்புணர்வு வார விழா நடை பெற்றது. விழாவிற்கு பரணி பார்க் கல்வி குழும தாளாளர் ஷி.மோகனரெங்கன் தலைமை தாங்கினார். செயலர் பத்மாவதி மோகனரெங்கன் முன்னிலை வகித்தார். பரணி பார்க் கல்வி குழும முதன்மை முதல்வர் முனைவர் சி.ராமசுப்பிரமணியன் பேசினார். விழாவில் இந்திய எரிசக்தி துறை பொது மேலாளர் பால கங்காதரன், துணை பொது மேலாளர் ஸி.குணசேகரன் கலந்து கொண்டனர். பேச்சு போட்டி மாணவ, மாணவியர்களி டையே நடத்தப்பட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. இதில் மாணவி சன்மிதா முதல் பரிசினையும், ஏஞ்சல், இரண்டாம் பரிசினையும், மிருதுளா மூன்றாம் பரிசினையும் பெற்றனர். மேலும் நேர்மை உறுதிமொழியும் எடுக்கப்பட்டது. விழாவில் பரணி பார்க் பள்ளி முதல்வர் ரி.சேகர் நன்றியுரையாற்றினார்.