tamilnadu

img

உடையநேரி மக்களுக்கு குடிநீர் வசதி சிபிஎம், மாதர் சங்கத்தின் போராட்டம் வெற்றி

புதுக்கோட்டை, ஆக.14- புதுக்கோட்டையை அடுத்த உடையநேரியில் குடியிருப்போருக்கு குடிநீர் வசதியை உள்ளாட்சி நிர்வாகம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. இது சிபி எம், ஜனநாயக மாதர் சங்கத்தின் தொட ர்ச்சியான போராட்டத்திற்குக் கிடை த்த வெற்றியாகும். புதுக்கோட்டையை அடுத்த உடையநேரி பகுதியில் பல வருடங்க ளாக குடியிருப்போருக்கு குடிநீர், மின்சாரம், சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் செய்து  தரப்படவில்லை. மேற்கண்ட பகுதி களை ஆக்கிரமித்து குடியிருப்போரை அப்புறப்படுத்தும் வேலைகளை ரியல் எஸ்டேட் கும்பல் அடியாட்களை வைத்து மிரட்டி வருகின்றனர். இந்நிலையில், உடையநேரியில் குடியிருந்து வரும் ஏழை, எளிய மக்களுக்கு மேற்கண்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதோடு, குடியிருக்கும் வீடுகளுக்கு பட்டாவும் வழங்க வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கமும் கடந்த பல வருடங்களாக போராடி வருகின்றன. அதன் தொடர்ச்சியாக தற்பொழுது உடையநேரி மக்களுக்கு உள்ளாட்சி நிர்வாகத்தின் சார்பில் குடிநீர் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. 

சிபிஎம், மாதர் சங்கத்திற்கு நன்றி
குடிநீர் கிடைப்பதற்கு காரணமாக இருந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  மற்றும் ஜனநாயக மாதர் சங்கத்தின ருக்கு செவ்வாய்க்கிழமை உடையநேரி மக்கள் பாராட்டு விழா நடத்தினர். இந்த விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எம். சின்னத்துரை, ஜனநாயக மாதர் சங்க  மாவட்டச் செயலாளர் டி.சலோமி, பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வில், துணைச் செயலாளர் கே.நாடியம்மை, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவ ட்டச் செயலாளர் துரை.நாராயணன், தமுஎகச மவாட்டச் செயலாளர் சு.மதிய ழகன், சிபிஎம் ஒன்றியச் செயலாளர்கள் டி.லட்சாதிபதி, எல்.வடிவேல், எம்.ஆர். சுப்பையா உள்ளிட்டார் பேசினர். அப்போது, கட்சித் தலைவர்களி டம் பேசிய உடையநேரி குடியிருப்பு  வாசிகள், தங்களுக்கு உறுதுணையாக இருந்த மார்க்சிஸ்ட் கட்சியிலும், ஜனநாயக மாதர் சங்கத்திலும் ஒட்டு மொத்த குடியிருப்பு வாசிகளும் இணையப் போவதாகத் தெரிவித்தனர்.