விழுப்புரம், செப். 12- முழுமையான ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் நகராட்சி ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். விழுப்புரம் நகராட்சி யில் ஒப்பந்த தூய்மைப் பணி யாளர்களாக சுமார் 360 பேர் பணியாற்றி வரு கின்றனர். இவர்களுக்கு சட்டப்படி வழங்க வேண்டிய 490 ரூபாய் வழங்கப்படுவதில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில் முழுமை யான ஊதியம் வழங்காத ஒப்பந்த நிறுவனத்தைக் கண்டித்தும், மாவட்ட ஆட்சி யர் உடனடியாக தலையீடக் கோரியும் துப்புரவு பணி யாளர்கள் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் முன்பு திங்களன்று (செப். 12) போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், மாதம் தோறும் ஊதியம் வழங்கப்படு வதில்லை என்றும், சட்டப்படி வழங்க வேண்டிய கூலியும் குறைத்து வழங்கப் படுகிறது. ஒரு நாள் விடுப்பு எடுத்தால் கூட 3 நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படுகிறது. ஊதியம் கேட்ட காரணத்திற்காக 5 தொழி லாளர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். எனவே சட்டப்படி யான கூலியை முழுமை யாக மாதம் தோறும் வழங்க வேண்டும், பணி நீக்கம் செய்யப்பட்ட தொழி லாளர்களுகு மீண்டும் பணி வழங்க வேண்டும் என்றனர். தகவல் அறிந்து அங்கு வந்த வட்டாட்சியர் மற்றும் தாலுகா காவல் துறையினர் தூய்மைப் பணியாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி னர். அதில் தீர்வு எட்டப்படாத தால் அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கிடையே போராட் டத்திற்கு ஆதரவு தெரி வித்து சிபிஎம், சிஐடியு களம் இறங்கியது. இதை யடுத்து மாவட்ட ஆட்சியர் மோகன், காவல் துறையி னர், வருவாய்த் துறை யினர், நகராட்சி நிர்வாகத்தி னர் சிபிஎம் மாநில குழு உறுப்பினர் டி. ரவீந்திரன், சிஐடியு மாவட்டத் தலைவர் எஸ்.முத்துக் குமரன், மாவட்டச் செய லாளர் ஆர்.மூர்த்தி தலை மையில் தூய்மைப் பணி யாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, சட்டப்படியான கூலி 490 ரூபாயும், பாதுகாப்பு உப கரணங்களும் வழங்க நடவடிக்கை எடுக்கப் படும் என்றும், பிற கோரிக்கைகளை பரி சீலனை செய்வதாகவும் தெரி வித்தனர். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.