புதுக்கோட்டை, அக்.21- நூறுநாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்கக்கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் புதுக்கோட்டை மாவட்டம் அரிமளத்தில் திங்கள்கிழ மையன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாதர் சங்கத்தின் ஒன்றியச் செயலாளர் எம்.சங்கீதா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்து மாவட்டத் தலைவர் பி.சுசீலா பேசினார். மாவட்டச் செயலா ளர் டி.சலோமி நிறைவுரையாற்றினார். வாலிபர் சங்க முன்னாள் ஒன்றியச் செய லாளர் ஆர்.வி.ராமையா வாழ்த்துரை வழங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் பிரியா, கௌரி, சித்ரா, கவிதா, பூமதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை அட்டை வைத்துள்ள அனை வருக்கும் வேலை வழங்க வேண்டும். விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் தாமதமின்றி வேலை அட்டை வழங்க வேண்டும். தீபாவளிப் பண்டி கையையொட்டி ரேசன் கடைகளில் அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை போது மான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆர்ப்பாட்டத்தில் முன்வைக்கப்பட்டன.