tamilnadu

img

பணியிட இழப்புகளை தடுத்து நிறுத்திடக்கோரி கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஆக.31-  கூட்டுறவு நிறுவனங்க ளில் துணைப் பதிவாளர், கூட்டுறவு சார்பதிவாளர் பணி யிட இழப்புகளை தடுத்து  நிறுத்த வலியுறுத்தி தமி ழ்நாடு அரசு கூட்டுறவுத்துறை ஊழியர் சங்கம் சார்பில் புதுக்கோட்டையில் திங்க ள்கிழமை பெருந்திரள் முறை யீடு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்க த்தின் மாவட்டத் தலைவர் வி.கே.ஏ.மனோகரன் தலை மை வகித்தார். கோரிக்கை களை விளக்கி அரசு ஊழி யர் சங்க மாவட்ட துணைத் தலைவர் குணசேகரன், கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ஆர்.சரணவக்குமார், இணைச் செயலாளர் ஜி.இந்திரா, எஸ்.சங்கீதா, சுந்தர்ராஜ் மற்றும் கூட்டுறவுத் துறை ஊழியர்கள்  பங்கேற்றனர்.

மாவட்ட துணைத் தலைவர் ரகுராம் நன்றி கூறினார். இணைப் பதிவாளர் நிலையிலான 8 மேலா ண்மை இயக்குநர் பணியி டங்களை கூடுதல் பதிவாளர் நிலையிலான பணியிடங்க ளாகவும், 32 துணைப் பதிவா ளர் நிலையிலான மேலா ண்மை இயக்குநர் பணியிட ங்களை இணைப்பதிவாளர் நிலையிலான பணியிடங்க ளாகவும், 54 கூட்டுறவு சார்பதி வாளர் நிலையிலான மேலா ண்மை இயக்குநர் பணியி டங்களை துணைப் பதிவா ளர் நிலையிலான பணியிட ங்களாகவும் நிலையுர்வு செய்ய பதிவாளரால் அர சுக்கு முன்மொழிவு பரிந்து ரைக்கப்பட்டுள்ளது. இந்தப்  பரிந்துரையால் கூட்டுறவுத்  துறையில் பணியாற்றும்  கீழ்நிலை அலுவலர்க ளுக்கான துணைப்பதிவா ளர், கூட்டுறவு சார்பதிவாளர் பணியிடங்கள் இழக்க ப்பட்டு பதவி உயர்வு பாதிக்க ப்படும். நாளுக்கு நாள் புதிய, புதிய திட்டங்களை அறி வித்து கடும் பணிச்சுமையில் இருக்கும் கீழ்நிலை அலு வலர்களின் பணியிட இழப்புகளை அனுமதிக்க இயலாது எனவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து  செய்ய வேண்டும். ஊதிய உயர்வு, பதவி உயர்வு முர ண்பாடுகளை களைய வேண்டும் என்பன உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழ க்கங்கள் எழுப்பப்பட்டன.