tamilnadu

நாட்டு நலப் பணித் திட்ட முகாம் 

 அறந்தாங்கி, செப்.26- அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்புமுகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் (பொ) தாமரைச் செல்வன் தலைமை வகித்தார். அறந்தை நகரில் சமூகப்பணியாற்றிடும் சமூக அமைப்பு களான தி போர்ட் சிட்டி ரோட்டரி கிளப் தலைவர் விஜய் கராத்தே பிரதர்ஸ் துணைத்தலைவர் விஸ்வமூர்த்தி பாரதி முற்றம் தலைவர் அஜய்குமார்கோஷ் வளர்மதி கல்வி அறக்கட்டளை தலைவர் மகா பாரதிராஜா அக்னி சிறகுகள் பாண்டியன் ஆத்மா சோஷியல் கிளப் செயலர் சுதாகரன் சுகாதர ஆய்வாளர் முத்துகணேஷ் நல்லாசிரி யர் சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இந்நிகழ்வில் பள்ளியின் அனைத்து ஆசிரியர்கள், மாண வர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக திட்ட அலுவலர் சிவராமன் அனைவரையும் வரவேற்று பேசினார். நிறை வாக உதவி திட்ட அலுவலர் அந்தோனிராஜ் நன்றி கூறி னார்.