tamilnadu

தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல்  

புதுக்கோட்டை, டிச.4- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சிக் க்குட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பாலித்தீன் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு, அபராதம் விதிக்கப்பட்டது. சுற்றுச்சூழலுக்கும், மண் வளத்துக்கும் மிகப்பெரிய எதிரியான பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பொருட்களை பயன்படுத்த மற்றும் இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும், தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனைத்தொடர்ந்து, பொதுமக்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் பைகளை பயன்படுத்துவதை தவிர்த்து வருகின்றனர்.  இந்நிலையில் ஆலங்குடி பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்களில் பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் பாலித்தீன் பைகளை பேரூராட்சி நிர்வாகத்தினர் பறிமுதல் செய்து அபராதமும் விதித்து வருகின்றனர். பாலித்தீன் பைகளை ஒழிக்கும் வகையில், ஆலங்குடி பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் இருந்து பாலித்தீன் பைகளை பறிமுதல் செய்தனர். மேலும், பாலித்தீன் பைகள் பயன்படுத்திய கடைகளுக்கு 3 ஆயிரத்து 300 ரூபாய் அபராதமும் விதித்தனர்.