அறந்தாங்கி, பிப்.16- மத்திய அரசின் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி கண்டன பொதுக்கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் வ.உ.சி திடலில் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு அறந் தாங்கி ஜமாஅத் தலைவர் எஸ்.என்.சேக் அப்துல்லா தலைமை வகித்தார். முன் னாள் ஜமாஅத் தலைவர் வி.எஸ். முகமது மைதீன் வரவேற்றார். அறந்தாங்கி தலைமை இமாம் ஏ.முகமது அபுபக்கர், கடற் கரை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் எ.அப் துல்லாஹ் அன்வாரி, அறந் தாங்கி ஜமாஅத் தலைவர் எஸ். முகமது சரீபு, புதுகை மாவட்ட உலமா சபை தலைவர் எ.சதக் கத்துல்லாஹ், அனைத்து ஜமா அத் கூட்டமைப்பு அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி தலைவர் நஜிமுதின், அறந்தாங்கி ஜமா அத் பொருளாளர் மன்சூர்முகம் மது ஆகியோர் முன்னிலை வகித் தனர். மாநில காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சு.திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக் குழு உறுப்பினரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ராகிய கே.பாலபாரதி, திரு மயம் சட்டமன்ற உறுப்பினர் திமுக எஸ்.ரகுபதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயற் குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மனித நேய மக்கள் கட்சி மாநில அமைப்புச் செயலாளர் தஞ்சை பாதுசா, திராவிட கழக மாநில பேச்சா ளர் பெரியார் செல்வம், ஆலங் குடி சட்டமன்ற உறுப்பினர் சிவ.வீ.மெய்யநாதன், அம்மா மக்கள் முன்னேற்ற கழக அமை ப்புச் செயலாளர் சிவ.சண் முகம், வழக்கறிஞர் பா.வெங்க டேசன், ஆகியோர் மத்திய அர சின் குடியுரிமைத் திருத்த சட் டத்தை திரும்ப பெற வலி யுறுத்தி கண்டன உரையாற்றி னார்கள். பொதுக்கூட்டத்தில் நீண்ட நாட்களாக சிறையில் இருக்கும் ஏழு பேரை நீதிமன்றம் விடு தலை செய்யச் சொல்லியும், தமி ழக அமைச்சரவையில் தீர்மா னம் நிறைவேற்றிய பிறகும் தமி ழக ஆளுநர் காலம் தாழ்த்துவது அநீதியாகும். உடனடியாக ஏழு பேரையும் விடுதலை செய்ய வேண்டும். ஏழை, எளிய நடுத் தர மக்களின் குழந்தைகளின் எதிர்காலத்தை சிதைக்கும் மத் திய அரசின் நீட் தேர்வை தமிழக அரசு கைவிட வேண்டும். மதத்தின் பேரால் மக்களை பிளவுபடுத்தும் மக்கள் விரோத சட்டங்களை நடைமுறைப் படுத்த மாட்டோம் என்று கூறிய 12 மாநிலங்கள் போல தமிழக அரசும் சட்டமன்றத்தில் தீர்மா னம் நிறைவேற்ற வேண்டும். சென்னை வண்ணாரப்பேட்டை யில் காவல்துறை அத்துமீறலை யும், காவல்துறை அதிகாரி தின கரனை பணி நீக்கம் செய்ய வேண்டும். காரைக்குடியிலிருந்து- சென்னை வரை ஏற்கனவே இயங்கி கொண்டிருந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை பயணியர் ரயில் மற்றும் சரக்கு போக்குவரத்துறை ஆகிய வற்றை மீன்டும் இயக்க வேண் டுமென்று பொதுக்கூட்டத்தில் மதவாத எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக தீர்மானங்கள் நிறை வேற்றினர். நிறைவாக மனித நேய மக்கள் கட்சி புதுக் கோட்டை கிழக்கு மாவட்ட செய லாளர் எ.கீரின் முகமது நன்றி கூறினார்.