tamilnadu

img

உயர்த்தப்பட்ட வீட்டு வரியை ரத்து செய்யக் கோரி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, அக்.1- புதுக்கோட்டை நகரத்தில் உயர்த்த ப்பட்ட வீட்டுவரியை ரத்துசெய்ய வேண்டுமென வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் செவ்வாய்க்கிழமையன்று புதுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். புதுக்கோட்டை திலகர் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் புதுக்கோட்டை வட்டத் தலைவர் சி.கருப்பையா தலைமை வகித்தார். கோரிக்கைகள் விளக்கி மாவட்ட இணைச் செயலாளர் அ.மணவாளன், மாவட்டத் துணைத் தலைவர் பி.பிரபாகரன், வட்ட நிர்வாகிகள் மா.வேலாயுதம், சின்னப்பா, ரெங்கசாமி, எழிலன் உள்ளிட்டோர் பேசினர். புதுக்கோட்டை நகரத்தில் உயர்த்த ப்பட்ட சொத்துவரியை ரத்துசெய்ய வேண்டும். மற்றும் சங்கத்தின் 10 அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஓய்வூதியர்கள் பங்கேற்றனர்.
திருத்துறைப்பூண்டி
ஓய்வு பெறும் நாளன்றே ஊழியர்களை தற்காலிக பணி நீக்கம் மற்றும் 17 பி பிரிவு குற்றச்சாட்டு வழங்கி அரசு ஊழியரை மன உளைச்சலுக்கு உள்ளாக்கி அரசு விதிகளுக்குப் புறம்பாக ஓய்வூதியம் பெறுவதை நிறுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்டவை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத் தலைவர் ஜெகவீரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் காதர் சுல்தான் முன்னிலை வகித்தார். மாநில செயலாளர் சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தை வாழ்த்தி, மாவட்ட தலைவர் சீனிவாசன், மணிவண்ணன், சண்முகம், சௌந்தரராஜன், ராஜாஜி, ஜெகநாதன், பிரகாஷ், லெனின் உள்ளிட்டோர் பேசினர். இதில் 50-க்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.