அறந்தாங்கி, ஜூன் 13- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி யில் வர்த்தக சங்க தலைவர் வரதராஜன் தலைமையில் செயலாளர் செந்தில்குமார், பொருளாளர் சலீம் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கொரோனா தொற்று பரவாமல் தடுக்கும் விதமாக நகரில் இயங்கி வரும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட வணிக நிறுவனங்களும் சுய ஊர டங்கு கடைபிடிக்கும் விதமாக மாலை ஐந்து மணியோடு கடைகளை அடைப்பது. இதை சனிக்கிழமை முதல் செயல்படுத்துவது என தீர்மானிக்கப்பட்டது. மேலும். ஊரடங்கு காலத்தில் அனைத்து நிறுவனங்களும் அடைக்கப்பட்டு இருந்த தால் வருமானம் இல்லாமல் கஷ்டத்தில் இருக்கும் வர்த்தகர்களின் நிலையை கருத்தில் கொண்டு மின் கட்டணத்தை தமிழக அரசு ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கு கால இரண்டு மாத கட்டட வாடகை வசூலிக்க தடை விதித்து அரசு உத்தரவிட வேண்டும் என்று வர்த்தக சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.