tamilnadu

லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை அதிகாரி உட்பட 4 பேர் மீது வழக்கு

புதுக்கோட்டை, பிப்.26- புதுக்கோட்டை ஆட்சியர்  அலுவலகத்தில் ஊரக வள ர்ச்சி முகமை உதவி இயக்கு னராக (தணிக்கை) தனபதி பணியாற்றி வருகிறார். இவ ருக்கு டிரைவராக பழனிய ப்பனும், அலுவலக உதவியா ளர்களாக தங்கராசு மற்றும் ஒரு பெண்ணும் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் திங்கள்கிழமை இரவு புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு த்துறை துணை காவல் கண்காணிப்பாளர் கரு ப்பையா தலைமையில் திடீ ரென தனபதி காரில் சோதனை நடத்தினார்கள். பின்னர் உதவி இயக்குனர் அலுவல கத்திலும் சோதனை நடந்தது.  இதில் உதவி இயக்குனர் தனபதி, டிரைவர், அலுவ லக உதவியாளர்கள் ஆகியோ ருடன் ரூ.24 ஆயிரத்து 800 மற்றும் உதவி இயக்குனர் தனபதியிடம் இருந்து 4 கிராம் தங்க நாணயத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதைதொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறையினர், உதவி இயக்குனர் தனபதி, டிரைவர் பழனியப்பன், அலு வலக உதவியாளர் தங்கராசு  உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.