tamilnadu

img

3500 ஆண்டுகள் பழமையான கற்கோடரி கண்டுபிடிப்பு

புதுக்கோட்டை:
புதுக்கோட்டைமாவட்டம் அறந்தாங்கி அருகே சுமார் 3500 ஆண்டுகள் பழமையான கற்கோடாரி கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ஆ.மணிகண்டன் தெரிவித்துள்ளது:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர், ராமசாமிபுரம் ஊர்களின் எல்லையில் அமைந்துள்ளஅம்பலத் திடலில் தொல்லியர் அடையாடளங்கள் இருப்பதகாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ஆய்வாளர்கள் ராஜேந்திரன், மணிகண்டன், கஸ்தூரிரெங்கன், முத்துக்குமார், மஸ்தான், பகுருதீன், மதியழகன், பஷீர் அலி உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டோம். ஆய்வின் போது எங்களுக்கு கிடைத்ததகவல் வருமாறு:
இப்பகுதியில் கருப்பு, சிவப்புபானை ஓடுகள் விரவிக் கிடப்பதோடு மிக அதிக பரப்பளவில் முதுமக்கள் தாழிகள் உள்ளன.வில்லுனி (வில் வன்னி) ஆறு ஓடும் இப்பகுதியில் தமிழ் இலக்கியங்களில் சுட்டப்பட்டுள்ளபடி வன்னிமரம் சூழ்ந்தும்அதன் அருகில் முதுமக்கள் தாழியும்புதைக்கப் பட்டுள்ளது. இத்திடலின் மேற்கு புறத்தில் சுண்ணாம்பு கற்காரையால் உருவாக்கப்பட்ட புதிர்த்திட்டையும் அதன் மையத்தில் கருப்பு, சிவப்பு பானை ஓட்டினால் ஆன கலயமும் காணப்படுகிறது. இது பழங்கால வழிபாட்டு முறையின் எச்சமாகும்.இந்தப் பகுதியில் கற்காலக் கருவியான கற்கோடாரி ஒன்று எங்களுடன் வந்த மாணவர் திருக்குறள் அசரனால் கண்டெடுக்கப்பட்டது. 

இதன் அமைப்பு முறையைவைத்துப் பார்க்கும்போது இதன் காலம் கி.மு.3500 ஆண்டுகளுக்கு முற்பட்டதாகக் கணிக்கலாம்.மனிதன் நாடோடி வாழ்க்கையிலிருந்து ஓரிடத்தில் நிலையான வாழ்க்கைக்குமாறிய காலத்தில்தான் இதுபோன்ற வழுவழுப்பான கற்கருவிகள், கைகளாலும், சக்கரத்தைக் கொண்டும் செய்யப் பட்ட மட்பாண்டங்களைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளான்.இந்த கற்கோடாரி 122 கிராம் நிறையுடன். 8.6 செ.மீநீளமும், 3.4 செ.மீ அகலத்துடன் கூர்மையான பகுதியும், 1.1 செ.மீஅகலத்தில் அடிப்பகுதியும் காணப்படுகிறது. இது குவார்ட்சைட் எனப்படும் கருங்கல் வகையைச் சார்ந்த கற்கருவியாகும். கீழ்ப்பகுதியை நன்கு தேய்த்து வழுவழுப்பாக்கி மெருகேற்றி கூர்மையான ஆயுதமாகத் தயாரித்து உள்ளனர். வெட்டும் பகுதியின் ஒருபுறம் உடைந்துள்ளது. அதிகம் பயன்படுத்தி யதால் இந்த உடைப்பு ஏற்பட்டு இருக்கலாம். இது மரத்தாலான தடியில் கட்டி ஆயுதமாகவும், பிறவற்றுக்கும் பயன்படுத்தியுள்ளனர் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.அறந்தாங்கிப குதியில் கிடைத்துள்ளமுதல் கற்காலகருவி இதுவாகும். இந்த கற்கருவினை அறந்தாங்கிவட்டாச்சியர் சூர்யப்பிரபுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும், கண்டெடுக்கப்பட்ட கருவி குறித்து இந்தியதொல்லியல் துறையின் சென்னை வட்டத்திற்கும், தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆணையருக்கும், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியருக்கும் தகவல் தெரிவிக்கப் ப்பட்டுள்ளது. இவ்வாறு மணிகண்டன் தெரிவித்துள்ளார்.(ந.நி.)