திருநெல்வேலி, ஆக.7- தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நெல்லை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறித்து ஆலோசனை கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்பதற்காக வெள்ளிக்கிழ மை நெல்லை மாவட்டம் வந்தார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் மாவட்டத்தில் 12.45 கோடி ரூபாய் மதிப்பில் முடிவு பெற்ற 11 திட்ட பணிகளை திறத்து வைத்தார். பின்னர்,165.25 கோடி மதிப்பில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். அதே போல் 2761 பயனாளிகளுக்கு 19.04 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். அதே போல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டி விட்டு 3221 பயனாளிகளுக்கு 78.77 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை முதல்வர் வழங்கினார். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் 2வது மாடியில் நடைபெற்ற கொரோனோ பாதிப்பு குறித்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி, மாவட்ட ஆட்சியர்கள் ஷில்பா பிரபாகர், அருண் சுந்தர் தயாளன் மற்றும் எம்எல்ஏக்கள் முரு கையாபாண்டியன், இன்பதுரை, செல்வ மோகன்தாஸ் பாண்டியன் , நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரெட்டியார்பட்டி வெ. நாராயணன் மற்றும் அதிகாரிகள் தொற்று பாதிப்பு நிலவரம் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.