சிபிஎம் கையெழுத்து இயக்கத்திற்கு மக்கள் உற்சாக வரவேற்பு
கோயம்புத்தூர், ஜூலை 29- புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக தமிழகம் முழுவதும் பொதுமக்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கோடி கையெழுத்து பெறும் இயக்கத்தை நடத்தி வருகிறது. இதன் ஒருபகுதியாக கோவை மாவட்டத்தில் கடந்த நான்கு நாட்களாக கட்சி அணிகள் முழுமையாக கையெழுத்து இயக்கத்தில் ஈடுபட்டு 50 ஆயி ரத்திற்கும் மேற்பட்ட கையெழுத்துக் கள் பொதுமக்களிடம் பெறப்பட்டுள் ளது. இதனை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பிவைக்கும் நிகழ்வு கோவை காந்திபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு அலு வலகத்தில் திங்களன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் பங்கேற்றார். மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் கட்சியின் இடைக்குழு செயலாளர்கள், பொதுமக்களிடம் பெற்ற கையெழுத்து படிவங்களை ஜி.ராமகிருஷ்ணனிடம் ஒப்படைத்தனர். முன்னதாக ஜி.ராமகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், பாஜக மோடி அரசு கொண்டுவந்துள்ள புதிய கல்விக் கொள்கை வரைவை முற்றாக கைவிட வேண்டும் என நாடு முழுவதும் பல்வேறு இயக்கங்கள் நடைபெற்று வருகின்றன. கல்வி கொள்கைக்கு எதிராக மக்கள் கட்சி வித்தியாசமின்றி கையெழுத்திட்டு தங்களின் எதிர்ப்பைத் தெரிவிக்கின் றனர். கருத்து தெரிவிக்கும் காலத்தை நீட்டிக்க வேண்டும் என்கிற குரல் வலுத்து வருவதையடுத்து தற்போது மத்திய அரசு கருத்து கூற ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்த வாய்ப்பை பயன்படுத்தி எங்கள் கையெழுத்து இயக்கத்தை ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரை நீட்டிக்க உள்ளோம்.
புதிய கொள்கையால் மாநில அரசின் பட்டியலில் உள்ள கல்வி பாதிக்கப் படும். சுயநிதிக்கல்லூரிகள் கல்விக் கட்டணத்தை நிர்ணயித்துக்கொள்ள லாம் என்ற கருத்தால் கல்விக்கட்டணக் கொள்ளை நிகழும். இக்கல்வி கொள்கையால் மாநில அரசின் கல்வி உரிமைகள் பறிபோகும் என்பதால் மாநில அரசு இதனை முற்றாக நிராகரிக்க வேண்டும் என்றார். இதேபோல், கோவை மாநகராட்சி குடிநீர் விநியோகத்தை பிரான்ஸ் நாட்டின் சூயஸ் நிறுவனத்திடம் ஒப்படை த்துள்ளது. இதனை கண்டித்து மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகிறது. ஆனால் தமிழக அரசும், கோவை மாநகராட்சியும் இத்திட்டத்தை நிறுத்துவது குறித்து எவ்வித அக்கறையும் காட்டுவதாக தெரியவில்லை. ஆகஸ்ட் 9 ஆம் தேதி இந்திய விடுதலை போராட்டத் தின் திருப்புமுனையாக அமைந்த வெள்ளையனே வெளியேறு இயக்கத் தின் நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இந்நாளில் கோவை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மறியல் போராட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுத்துள்ளது. கோவை மக்களின் அடிப் படையான குடிநீர் உரிமையில் கை வைக்கும் கோவை மாநகராட்சியை கண்டித்து நடத்தும் போராட்டத்தில் ஆயிரமாயிரமாய் பொதுமக்கள் பங்கேற்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம் என்றார். இந்நிகழ்ச்சியில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.ராதிகா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கருப்பையா, என்.ஜெயபாலன், கே.மனோகரன், கே.அஜய்குமார், என்.பாலமூர்த்தி, கே.எஸ்.கனகராஜ் மற்றும் சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் யு.கே.வெள்ளிங்கிரி உள்ளிட்ட மாவட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.