tamilnadu

img

மூட்டை ஒன்றுக்கு ரூ. 40... விவசாயிகளை மிரட்டி கமிஷன்... நேரடி நெல் கொள்முதல் நிலையம் விவசாயிகளுக்கானதா? தனியார் வியாபாரிகளுக்கானதா?

தரங்கம்பாடி, ஆக.16- தரங்கம்பாடி வட்டத்தி லுள்ள ஒரு சில அரசு நேரடி  கொள்முதல் நிலையங்க ளில் மூட்டை ஒன்றுக்கு ரூ.40 கமிஷன் பெறுவதோடு, தனி யார் நெல் வியாபாரி களுக்கு தனி மரியாதை அளி ப்பதாகவும், உள்ளூர் விவ சாயிகளை அவமதிப்ப தாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தரங்கம்பாடி வட்டத்தில் முக்கரும்பூர், இலுப்பூர், திருவிளையாட்டம், மா மாகுடி உள்ளிட்ட பகுதி களில் 20-க்கும் மேற்பட்ட நே ரடி நெல் கொள்முதல் நிலை யங்கள் திறக்கப்பட்டு இயங்கி வருகின்றன. 40  கிலோ எடை கொண்ட  மூட்டையாக விவசாயிகளி டமிருந்து நெல் பெறப்படும் நிலையில் சாக்கின் எடை யாக 600 கிராம் மட்டும் கூடுத லாக எடுப்பதற்கு பதிலாக 41.5 கிலோ எடை போடுவ தாகவும், மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் முன் கூட்டியே பணமாக செலுத்தினால் தான் நெல்லை கொள்முதல் செய்வதாகவும் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக முக்கரும்பூர் கிராமத்தில் செயல்படும் நேரடி நெல்கொள்முதல் நிலையத்தின் பட்டியல் எழுத்தர் கவியரசன், விவ சாயிகளை மிரட்டியே கமி ஷனை பெறுவதாகவும், 100 ரூபாய் குறைவாக கொ டுத்தாலும் நெல்லை வாங்க முடியாது என விரட்டுகி றாராம்.

ஆனால் தனியார் நெல் வியாபாரிகள் லாரி களில் நெல் மூட்டைகளை ஏற்றி வந்தால் வழியில் சென்று வரவேற்று உடன டியாக கொள்முதல் செய்து  விடுவதாகவும், வியாபா ரிகள் 60 ரூபாய் கமிஷன்  தருவதால் சில மணி நேர ங்களிலேயே நெல்லை கொ ள்முதல் செய்துவிடுகிறார். ஒரு நாளைக்கு 800  மூட்டை மட்டுமே எடுக்க  வேண்டும் என்ற அதிகாரி களின் உத்தரவால் வியாபாரி களின் நெல்லை 600 மூட்டை வரை வாங்கிவிட்டு பெய ரளவிற்கு 200 மூட்டைகள் மட்டுமே விவசாயிகளிடம் வாங்குகிறார். இதுகுறித்து அப்ப குதி விவசாயிகள் கூறு கையில், முக்கரும்பூர் கிரா மத்தில் தற்போது 560 ஏக்கர்  நிலங்களில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. அறுவ டைக்கு தயாராக இருந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பெரும்பாலான விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு ஓரளவு தேறியதை சிரமப்பட்டு நேரடி கொள்முதல் நிலையத்தில் நாள்கணக்கில் காத்திருந்து விற்பனை செய்தால் எங்களின் உழைப்பை சுர ண்டும் வகையில், மூட்டை ஒன்றுக்கு 40 ரூபாய் வீதம் தந்தால்தான் நெல்லை கொள்முதல் செய்கின்றனர்.

 நாள்தோறும் 800 மூட்டை களை கொள்முதல் செய்து  32 ஆயிரம் ரூபாய் கமிஷ னாகவே கொள்ளையடி க்கின்றனர். விவசாயிக ளுக்காக திறக்கப்பட்டதா?  தனியார் வியாபாரிக ளுக்காக திறக்கப்பட்டதா? என்று சந்தேகம் வரும் வகை யில் வியாபாரிகளிடம் கூடுத லாக கமிஷன் வாங்கிக்கொ ண்டு பட்டியல் எழு த்தர் செயல்படுவது வேத னையாக இருப்பதாக விவ சாயிகள் கூறுகின்றனர். இதுகுறித்து கூறிய தமிழ்நாடு விவசாயிகள் சங்க  வட்டச் செயலாளர் டி.இரா சையன், தனியார் வியாபா ரிகள் அரசு கொள்முதல் நிலையங்களில் நெல் விற்ப னை செய்வதை தடுப்ப தோடு, மாவட்ட ஆட்சியர்  உடனடியாக நேரடி நெல்கொ ள்முதல் நிலையங்களை ஆய்வு செய்து உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். உடனடி நடவடிக்கை இல்லையெனில் போராட்டம்  நடத்துவோம் என எச்ச ரித்துள்ளார்.