tamilnadu

img

அரசு ஊழியர் சங்கத்தின் மக்கள் சந்திப்பு இயக்கம்

தருமபுரி, நவ.12- இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசா ணையை (எண்.56) ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் தரும புரி மாவட்டம் முழுவதும் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடை பெற்றது. இளைஞர்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் அரசாணை (எண்.56) ரத்து செய்திட வேண்டும். அரசுத் துறையில் அவுட் சோர்சிங் முறை மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை கைவிட வேண்டும். தமிழக அரசுத்  துறைகளில் காலியாக உள்ள நாலரை லட்சம் பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும். சத்துணவு,  அங்கன்வாடி ஊழியர் கள், வருவாய் கிராம உதவி யாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், எம்ஆர்பி, செவிலியர்கள் மற்றும் சிறப்பு காலமுறை ஊதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை தமிழக முதல்வர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில நிர்வாகிகளுடன் கலந்துரையாடல் செய்து தீர்வு ஏற்பட முன்வர வேண்டும் என வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத் தின் சார்பில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்று வருகிறது.  இதன்ஒருபகுதியாக தருமபுரி  மாவட்டம் காரிமங்கலம்,பாலக் கோடு, தருமபுரி ஆகிய இடங் களில் மாவட்டத் தலைவர் எம்.சுருளிநாதன் தலைமையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம்  நடைபெற்றது. மாநிலப் பொரு ளாளர் மு.பாஸ்கரன், மாநில துணைத்தலைவர்கள் ஜி.பழனி யம்மாள், பெரியசாமி, மாவட்டச் செயலாளர் ஏ.சேகர், மாவட்டப் பொருளாளர் கே.புகழேந்தி, வட்ட செயலாளர்கள் காரிமங்கலம் முனிரத்தினம், பாலக்கோடு நாக ராஜ், ஜெயவேல் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். மேலும், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க சேலம் கோட்ட  இணை செயலாளர் ஏ.மாதேஸ் வரன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க  மாவட்ட செயலாளர் பி. கிருஷ்ணன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.  இதேபோல் மொரப்பூர், அரூரில் நடைபெற்ற பிரச்சாரத் திற்கு மகளிர் துணைக்குழு மாவட்ட அமைப்பாளர் பி.எஸ். இளவேனில் தலைமை வகித்தார்.  வட்ட செயலாளர் சி.அழகிரி வர வேற்றார். மாநில துணைத் தலைவர் பெரியசாமி சிறப்புரை யாற்றினார். வட்ட தலைவர்கள் அரூர் சுதாகர், பாப்பிரெட்டிப் பட்டி சண்முகம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசி னர்.