tamilnadu

img

புதுக்கோட்டை அருகே 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு

பொன்னமராவதி, ஏப்.19-ஒரு தரப்பைச் சேர்ந்த பெண்களை இழிவுபடுத்தி பேசி வாட்ஸ் அப் மூலம் பரவ விட்டதால் ஆத்திரமடைந்த மற்றொரு தரப்பினர் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வன்முறை வெடித்தது. இதைத்தொடர்ந்து 30 கிராமங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்துப் பெண்களை இழிவுபடுத்தும் வகை யில் இருவர் உரையாடிய ஆடியோ வாட்ஸ் அப் மூலம் கடந்த சில தினங்களாக பொன்னமராவதி பகுதிகளில் பரவி யுள்ளது. இது அச்சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. வாட்ஸ் அப்பில் இழிவுபடுத்திப் பேசிய நபர்கள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டுமென பொன்னமராவதியை அடுத்த கருப்புக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமத் தினர் கடந்த வியாழக்கிழமை இரவு பொன்னமராவதி காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி னர். பொன்னமராவதி பேருந்துநிலையத்தி லும் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள்கடைகள், வாகனங்களை நொறுக்கிய வன்முறை சம்பவங்களும் நடைபெற்றது.இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வராஜ் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அவ

தூறாகப்பேசி வாட்ஸ் அப்பில் வெளியிட்டநபர்களை கைது செய்து நட வடிக்கை எடுப்பதாக உத்தரவாதம் அளிக்கப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமை பொன்னமராவதி பேருந்து நிலையம் முன்பாக ஆண்களும், பெண்களுமாக 2 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் உள்ள கடைகள், வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் காவல் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்தன. தொடர்ந்து நடைபெற்ற இந்தப் போராட்டம் பொன்னமராவதியைச் சுற்றியுள்ள 30-க்கும் மேற்பட்ட கிராமங்களில் வெடித்தது. போலீசார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர் களை கலைக்க முயன்றதால் அப்பகுதிபோர்க்களம் போல காட்சியளித்தது. இச்சம்பவத்தில் 3 போலீசார் மற்றும் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர். இதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பி.உமா மகேஸ்வரி, திருச்சி சரக காவல் துறை ஐஜி வரதராஜூ, டிஐஜி லலிதா லெட்சுமி, எஸ்.பி.ஆறுமுகம், இலுப்பூர் கோட்டாட்சியர் சிவ தாஸ் ஆகியோர் பொன்னமராவதியில் ஆலோசனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஏப்.19 இரவு 12 மணி முதல் 21-ம் தேதி முற்பகல் 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பித்து இலுப்பூர் கோட்டாட்சியர் சிவதாஸ் உத்தரவிட்டுள்ளார்.


சிபிஎம் கண்டனம்


இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் கூறியதாவது: பொன்னமராவதியில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவம் குறித்து கட்சியின் மாவட்ட செயற்குழு மிகுந்த கவலையையும், வேதனையையும் தெரிவித்துக் கொள்கிறது. பெண்களை இழிவுபடுத்தி பேசிய நபர்கள் மீது காவல்துறையினர் உறுதியான நட வடிக்கை எடுக்க வேண்டும். தங்கள் சமூகத்தினரை இழிவாகப் பேசியதால் ஆத்திரமடைந்து போராட்டம் நடத்திய மக்களை மாவட்ட நிர்வாகம் அழைத்துப் பேசி சுமூகமான பேச்சுவார்த்தை நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். இதை சாக்காக வைத்து, போராட்டம் நடத்திய அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுப்பதைத் தவிர்த்து சகஜ நிலை திரும்புவதற்கான முயற்சியை காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.(ந.நி.)