tamilnadu

img

ஆளுநர் கிரண்பேடியை திரும்பப்பெறுக..... புதுச்சேரி முதல்வர்-அமைச்சர்கள் குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தல்.....

புதுச்சேரி;
புதுச்சேரி வளர்ச்சிக்கு இடையூறாக நிற்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெறவேண்டும் என்று குடியரசுத் தலைவரை சந்தித்த முதல்வர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் வலியுறுத்தினர்.

புதுச்சேரியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் வளர்ச்சித் திட்டங்களுக்கு தொடர்ந்து முட்டுக்கட்டை போட்டு வரும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடியை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி,மதிமுக உள்ளிட்ட கட்சிகள், ஜனநாயக அமைப்புகள் சார்பில் பல்வேறுகட்ட போராட்டங்கள் புதுச்சேரியில் நடத்தப்பட்டு வந்தன. இறுதியாக மாநிலம் முழுவதும் மக்களிடமிருந்து  கையெழுத்துக்கள் பெறப்பட்டன. 

தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் புதன்கிழமையன்று  குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை, முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, மக்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் மக்களிடம் இருந்து பெறப் பட்ட கையெழுத்து பிரதிகளை சந்தித்து வழங்கினர். மக்களால் தேர்வு செய்த சட்டமன்ற உறுப்பினர்கள், அமைச்சர் கள், முதல்வரை துணை நிலை ஆளுநர் சந்திக்க மறுப்பதும் அமைச்சரவையின் முடிவுக்கு மாறாக கோப்புகளை திருப்பி அனுப்புவதும், மக்கள் வளர்ச்சி திட்டங்களுக்கும் துணை நிலை ஆளுநர் கிரண்பேடி தடையாக இருந்து வருகிறார். எனவே அவரை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமென்று இச்சந்திப்பின்போது குடியரசுத் தலைவரிடம் வலியுறுத்தப்பட்டது.