புதுதில்லி:
ஊரடங்கு காரணமாகத் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை, விரைந்து முடிப்பதற்கான சிறப்பு நீதிபதிகளை நியமிக்க உச்சநீதிமன்றம் முடிவு செய் துள்ளது.இதன்படி, ஜாமீன், முன் ஜாமீன் வழங்குதல், தள்ளுபடி செய்தல், விசாரணையை முடித்துக் கொள்ளுதல் ஆகியவற்றில் தீர்ப்பு வழங்கும் பணிகள் சிறப்பு நீதிபதி தலைமையில் நடைபெறும் என்று கூறியுள்ளது.
அதேபோல, குற்ற வழக்குகளை வேறு மாநில நீதிமன்றங்களுக்கு மாற்றுதல், குடும்ப நலவழக்குகளை அவசரமாக வேறுமாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரும் மனுக்கள் தொடர்பான விசாரணையும் நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.நீதிமன்றங்களில் மனுக்கள்மீதான விசாரணை நடத்தப்படாமல் வழக்குகள் அதிகம் தேக்கமடைந்து வருவதை மனதில் கொண்டும், தங்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் சட்ட அதிகாரங்களின் அடிப்படையிலும் இந்தசிறப்பு ஏற்பாட்டைச் செய்திருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.இதுதொடர்பாக குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெற் றுள்ளதாகவும் அது தெரிவித் துள்ளது.