புதுச்சேரி,மார்ச் 23- மார்ச் 31வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரி வித்துள்ளார். புதுச்சேரியில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் நாராயணசாமி தலைமையில் திங்களன்று (மார்ச் 23) அமைச்சரவை கூட்டம் நடை பெற்றது. பின்னர் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறிய தாவது:- புதுச்சேரியில் போர்க்கால அடிப்படையில் கொரோனாவை தடுக்க நடவடிக்கை எடுப்பதற்கு மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். மார்ச் 31ம் தேதி வரை பொது இடங்களில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் வாகனங்களில் செல்வதை தவிர்க்க வேண்டும். வெளிநாடு மற்றும் வெளி மாநிலத்தைச் சேர்ந்த 6 ஆயிரத்தி ற்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் புதுச்சேரியில் உள்ள 300 ஓட்டல்க ளில் தங்கியுள்ளனர். அவர்களில் 90 விழுக்காட்டினர் திரும்பி விட்டனர். அதனால் யாருக்கு கொரோனா இருக்கு, யாருக்கு இல்லை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. இருந்தாலும் காவல்துறை, வருவாய் ஓட்டல்களில் தங்கியிருந்த பெயர்களை எடுத்து, பணிபுரிந்த 515 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
மதுகடைகள் மூடல்
தொழிற்சாலை அதிபர்கள் கோரிக்கையை ஏற்று கொண்டு தொழிற்சாலையை மூடுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் உணவு விடுதிகளில் யாரும் அமர்ந்து சாப்பிடக் கூடாது. பார்சல் வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். எங்கும் 5 பேருக்கு மேல் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும். சுமோட்டா, சுகி உள்ளிட்ட ஓட்டல் உணவுப்பொருட்களை ஓட்டல்களில் வாங்கிச்சென்று வீடுகளில் கொடுக்கும்நிறுவனங்களின் பணியை 31ஆம் தேதி வரை முழுமை யாக நிறுத்திக் கொள்ள வேண்டும். அதேப்போல் மதுபான கடைகளும் 31 வரை மூடப்படும்.
சிறப்பு மருத்தவமனைகள்
2 சிறப்பு மருத்துவமனைகளை உருவாக்க வேண்டும் என்று மருத்து வர்கள் ஆலோசனை வழங்கினர். அதன்படி புதுச்சேரி கோரி மேட்டில் உள்ள மகாத்மாகாந்தி பல்மருத்துவ மனையில் 50 படுக்கைகளும், இஎஸ்ஐ மருத்துவமனையில் 100 படுக்கைகளும் அமைத்து கொரோனா சிகிச்சைக்காக மாற்றம் செய்யப்படுகிறது. பால், பழம் உள்ளிட்டஉணவுப் பொருட்களை விற்பனை செய்யும் கடைகள் மட்டுமே இயங்கும். மேலும் மருந்தகங்கள், பெட்ரோல் பங்க், கேஸ் ஏஜென்சிகள் இருக்கும். பேருந்துகள், மோட்டார் சைக்கிள்கள் நிறுத்தப்படும். புதுச்சேரியில் கடந்த 3 நாட்களாக புதியதாக கொரோனா பாதிப்பு ஏதும் இல்லை. கொரோனா பாதிப்பில் புதுச்சேரி 2 ஆம் நிலையில் உள்ளது. 3ஆம் நிலையில் வந்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.