புதுதில்லி: கொரோனா வைரஸ் பரவலை தடுக்கவும், மக்களை நோய் தெற்றலிருந்து பாதுகாக்கவும் அடுத்த 21 நாட்கள் ( ஏப்ரல் 14 )வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பொதுமக்கள் இதற்கு ஒத்துழைத்து வீட்டுக்குள் இருக்கும் படியும்,மக்கள் வெளியே சென்றால் கொரோனா வீட்டிற்குள் வந்துவிடும் எனவும் பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே நோய் தொற்றிலிருந்து நாட்டை பாதுகாக்க இன்று நல் இரவு 12மணி முதல் அடுத்த 21 நாட்களுக்கு (ஏப்ரல் 14 வரை) ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் சமூக கூடுதலை தவிர்த்து, வீட்டுக்குள் இருந்து, தங்களையும்,நாட்டையும் பாதுகாக்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இப்படி செய்தால் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த 100 சதவீதம் சாத்தியம் உள்ளதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உதவுகின்ற காவல்துறையினருக்கும் ,மருத்துவர்களுக்கும்,ஊடக நண்பர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.