மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செவ்வாயன்று தங்களது பிரச்சாரத்தை பேரெழுச்சியுடன் நிறைவு செய்தனர்.
கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் எச்.வசந்தகுமார் மற்றும் தூத்துக்குடி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கனிமொழி ஆகியோரது நிறைவுப் பிரச்சாரங்களில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்று வெற்றிக்கு கட்டியம் கூறினர்.