tamilnadu

img

கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று

கோவை சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கு தடையில்லா சான்று 

கோயம்புத்தூரில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும் என்று மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்திருந்தார். இதன் அடிப்படையில், ஆய்வு மேற்கொள்ளப்பட்ட 4 இடங்களில் ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறைச் சாலையில் 20.7 ஏக்கர் நிலம் தேர்வானது. இதனைத் தொடர்ந்து கோவை யில் உலகத் தரம் வாய்ந்த கிரிக்கெட் மை தானம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. மைதானம் குறித்து தமிழ்நாடு விளையாட்டுத் துறை  அமைச்சரும், துணை முதலமைச்சரு மான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஆலோசிக்கப்பட்டு வரும் நிலையில், கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கான கட்டுமானப் பணிகளுக்காக தடை யில்லா சான்று கோரி, இந்திய விமான  நிலைய ஆணையத்திடம் விண்ணப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க இந்திய விமான நிலைய ஆணையம் தடையில்லா சான்று வழங்கியது. மேலும், மைதானம் அமைப்பதற்கான விரிவான திட்ட மதிப்பீடு தயார் செய்யும் பணியில் விளை யாட்டுத் துறை முழுவீச்சில் தீவிரமாக ஈடு பட்டுள்ளது. அதுமட்டுமின்றி மைதானத் திட்டத்தின் வடிவமைப்பு மேம்பாட்டுக்கான பரிந்துரைகள் மற்றும் கருத்துக்களைப் பகிர்ந்துகொள்ள பொதுமக்களுக்கு தமிழ்நாடு அரசு அழைப்பு விடுத்துள்ளது.