பி.பி.பாளையத்தில் வீதிகளில் கழிவு நீர்
வழிந்து ஓடும் அவலம் கிருஷ்ணகிரி, பிப்.26 - தளி ஒன்றியம், தாரவேந்தரம் ஊராட்சி பி.பி. பாளையத்தில் ஒழுங்கான சாலை, கழிவுநீர் கால்வாய் வசதிகள் செய்து கொடுக்காததால் வீதிகளில் வீடுகளில் கழிவு நீர் அங்கிங்கேனாதபடி எங்கும் வழிந்து ஓடிக்கொண்டிருக்கிறது.இதுகுறித்து மக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம்,வட்டார வளர்ச்சி அலுவலர்,வட்டாட்சியரிடம் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல ஆண்டுகளாக அனைத்து வீதியெங்கும் கழிவுநீர் ஓடிக் கொண்டிருப்பதால் மக்களுக்கு குழந்தைகளுக்கு விரைவில் நோய் தொற்றுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து உடன் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும் என மார்க்சிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் நடராஜன் தேன்கனிக்கோட்டை வட்டத்தின் மூத்த தலைவர் நாகராஜ் ரெட்டி,இளம் தலைவர் புருஷோத்தம ரெட்டி அறிவித்துள்ளனர்.
ல்லூரி: பட்ஜெட்டில் அறிவிக்க வாலிபர் சங்கம்
கோரிக்கை கள்ளக்குறிச்சி, பிப்.26 - கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டையில், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாணவர் சங்கத்தின் நீண்ட நாள் கோரிக்கையான உளுந்தூர்பேட்டை பகுதியில் அரசு கல்லூரி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பல கட்ட போராட்டங்களை நடத்தி உள்ளனர். கடந்த சட்டமன்ற தேர்தலின்போது அளித்த வாக்குறுதியில் உளுந்தூர்பேட்டை நகரில் அரசு கல்லூரி அமைக்கப்படும் என்பதாகும். ஆனால்,இதுவரையில் நிறைவேற்றப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், மார்ச் 14 தமிழ்நாடு பட்ஜெட்டில் உளுந்தூர்பேட்டைக்கு அரசு கலைக்கல்லூரி அறிவிக்க வேண்டும் என்று வாலிபர் சங்கம், மாணவர் சங்கம் இணைந்து வலியுறுத்தியுள்ளது.