திருவொற்றியூர் வி.பி. நகரில் ரூ.10.5 லட்சம் மதிப்பீட்டில் தெரு விளக்கு புதிய கம்பங்கள் மாற்றும் பணி தொடங்கியது. திருவொற்றியூர் 4ஆவது வார்டில் வி.பி. நகர், ராமநாதபுரம், முல்லை நகர், ஆதிதிராவிடர் காலனி, முருகப்பா நகர், ஜெய்ஹிந்த் நகர், திருவீதி அம்மன் நகர், மாகாளியம்மன் நகர், எர்ணீஸ்வரர் நகர் என அனைத்து நகர்களிலும் தெருவிளக்கு கம்பங்கள் உரியபராமரிப்பு இல்லாததால் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டனர். இதையடுத்து அனைத்து கம்பங்களையும் மாற்ற வேண்டும் என மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன் கடந்த 3 ஆண்டுகளாக கேட்டுக்கொண்டதன் அடிப்படையில் புதிய கம்பங்கள் நிறுவும் பணி செவ்வாயன்று (பிப். 25) நடைபெற்றது. இதில் மின்துறை உதவிப் பொறியாளர் கணேஷ், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.கருணாநிதி, நிர்வாகிகள் கே.வெங்கடையா, ராமன், இளங்கோவன், சாரங்கபாணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.