tamilnadu

img

தனியார்மயத்திற்கு எதிராக அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டம்

தனியார்மயத்திற்கு எதிராக அஞ்சல் துறை ஊழியர்கள் போராட்டம்'

அஞ்சல் துறையை தனியாரிடம் கொடுக்கும் ஒன்றிய அரசின் நட வடிக்கையை எதிர்த்து செவ்வாயன்று (பிப்.25)  அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சென்னை அண்ணாசாலையில் உள்ள தமிழ்நாடு மாநில அஞ்சல் நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஊழி யர்கள் கலந்து கொண்டனர். புதிய அஞ்சல் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், அனைத்து நிலைகளிலும் உள்ள பதவிகளை மறுசீரமைப்பு செய்ய வேண்டும். 8வது ஊதியக்குழுவில் கிராமப்புற அஞ்சல் ஊழியர்களை இணைக்க வேண்டும். ரயில்வே அஞ்சல் சேவை அலுவலகங்களை மீண்டும் தொடங்க வேண்டும். பல அஞ்சல் குறியீடுகளுக்கு (பின்கோடு) வரும் தபால்களை ஒரே இடத்தில் இருந்து பட்டுவாடா செய்யும் வண்ணம் ஒருங்கிணைந்த பட்டுவாடா மையம் அமைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி செவ்வாயன்று (பிப்.25) தாம்பரம் செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் தர்ணா போராட்டம் நடத்தினர். தென்சென்னை கிளை-2ன் தலைவர் பி.டில்லிக்குமார் தலைமையில் மாநில துணைப்பொதுச் செயலாளர் ரவிக்குமார், உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு ஒருங்கிணைப்பாளர் விஜயலட்சுமி, கிளை-2ன் செயலாளர் ஹெலன் தேவகிருபை உள்ளிட்டோர் பேசினர்.

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் திருவள்ளூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் கோ.இளங்கோவன் தலைமை தாங்கினார்.மாவட்ட நிர்வாகிகள்  ஆர்.ஜெயராமன், கு.கன்னியப்பன், து.மகேந்திரன், ஆர்.ராமமூர்த்தி, என்.லோகநாதன், எம்.எஸ்.வினாயகம், எம்.சந்திரசேகரன், யோகராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 மின்சார வாரியத்தில் உள்ள 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பினர் செவ்வாயன்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின் திட்ட தலைவர் எம்.மயில்வாகனன் தலைமையில்த மிழ்நாடு செங்கல்பட்டு திட்ட செயலாளர் வி.தேவகுமார், ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் தலைவர் எம்.குணசேகரன்,கிளைத் தலைவர் எல்.பாபு, உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்பு குழுவில் ஒருங்கிணைப்பாளர் மனோ மங்கையர்கரசி, ஓய்வு பெற்ற நல அமைப்பின் கிளை செயலாளர் எம்.வெங்கடேசன், சிஐடியு மாவட்ட செயலாளர் கே.பகத்சிங் தாஸ் உள்ளிட்ட பலர் பேசினர். திட்ட பொருளாளர் ஜெயபிரகாஷ் நன்றி கூறினார்.