tamilnadu

மரவள்ளிக்கிழங்கிற்கு நியாயமான கொள்முதல் விலையை தீர்மானித்திடுக!

மரவள்ளிக்கிழங்கிற்கு நியாயமான கொள்முதல் விலையை தீர்மானித்திடுக!

மரவள்ளிக்கிழங்கிற்கு முத்தரப்பு கூட்டம் நடத்தி நியாயமான விலையை தீர்மானிக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார். கடலூரில் செய்தியாளர்களை சந்தித்த பி.சண்முகம், கடந்த ஆண்டின் இறுதி மாதத்தில் வீசிய பெஞ்சால் புயலால் கடலூர், விழுப்பு ரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் கடுமையாக பாதித்தது. நூற்றுக் கணக்கான கிராமங்கள் தண்ணீரில் மூழ்கின. தென்பெண்ணை ஆற்றால் ஏராளமான கிராமங்கள் பாதித்தன.  இவ்வளவு பெரிய பாதிப்பு ஏற்பட்ட பிறகு, நிவாரணப் பணிகளில் மாநில அரசுடன் இணைத்துக் கொள்ள வேண்டும் என்ற அணுகுமுறை ஒன்றிய பாஜக அரசிடம் இல்லாமல்போனது கண்டனத்துக்குரியது என்றார். எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்து வரும் மாநிலங்களுக்கு இயற்கை  பேரிடர் நிதி வழங்குவதில் பாரபட்ச மாக நடந்து கொள்வதும் நிதி வழங்காமல் பழிவாங்குவதும் தமிழ்நாட்டு மக்களை கொள்வதற்கு சமம் என்றும் கடுமையாக சாடினார். பெஞ்சல் புயல் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க வும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வும் தமிழ்நாடு அரசு கோரிய ரூ.37 ஆயிரம் கோடி ஒன்றிய பாஜக அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினார். ஒன்றிய அரசு பட்ஜெட்டில் 100 நாள் வேலை திட்டத்திற்கு ரூ.87 ஆயிரம் கோடி ஒதுக்கியுள்ளது. ஏற்கெனவே, தமிழ்நாட்டிற்கு ரூ.1,107 கோடி பாக்கி தர வேண்டி உள்ளது. அந்த தொகையையும் ஒன்றிய அரசு விரைந்து வழங்க வேண்டும் என்றார். மரவள்ளி கிழங்கு முக்கிய பயிராக தமிழ்நாட்டில் 18 மாவட்டங்களில் பயிரி டப்பட்டு வருகிறது. அதற்கான விலையை தமிழ்நாடு அரசு தீர்மானித்தாலும், அரசு கொள்முதல் செய்வதில்லை. அரசு அறிவித்த விலைக்கு தனியார் வியாபாரிகள் கொள்முதல் செய்வதில்லை.  வியா பாரிகளும், ஜவ்வரிசி ஆலை முத லாளிகள் அரசின் முடிவுகளை அமல்படுத்த மறுக்கின்றனர். இதனால், விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள். எனவே, முத்தரப்பு கூட்டத்தில் ஏற்றுக்கொண்ட அடிப்படையில் விலையை தீர்மானிக்க வேண்டும். அரசு தீர்மானித்த விலையை கொடுக்க மறுக்கின்ற ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு முதல மைச்சருக்கு கோரிக்கை விடுத்தார். தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்துக தென்பெண்ணை ஆற்றின் கரையை பலப்படுத்த சுவர் கட்ட வேண்டும். கடலூர் வட்டத்தில் மலையடி குப்பம், கொடுக்கம்பாளை யம், பெத்தநாய குப்பம் கிராமங்களைச் சேர்ந்த விவ சாயிகள் உடைய 10,000 முந்திரி மரங்களை மாவட்ட நிர்வாகம் இயந்திரங்களை வைத்து பிடுங்கி அழித்துள்ளது. 200 ஆண்டுகளுக்கு மேலாக அனுபவத்தில் உள்ள நிலம். 1905 ஆம் ஆண்டு சட்டப்படி அனுபவ இடங்களுக்கு பட்டா தருவதற்கான தகுதி வாய்ந்த இடம். என்ன காரணத்தினாலோ பட்டா கேட்டு மனு அளித்தும் பட்டா இதுவரை வழங்கப்படவில்லை. கடந்த மாதம் முந்திரி பூத்துக் காய்ப்பதற்கு தயாராக இருந்த நிலையில் மரங்களை வேரோடு பிடுங்கி எறிந்து இருப்பது கண்டனத்துக்குரியது என்றும் அவர் தெரிவித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் தலைவர்கள் சாமி.நட ராஜன், பி.டில்லிபாபு, முகமது அலி பெருமாள், ஜி.ஆர்.ரவிச்சந்திரன், ஆர்.கே.சரவணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.