புதுச்சேரி, ஜூலை 18- மக்கள் அளிக்கும் புகா ருக்கு தீர்வு காணாத அதிகாரி கள் மீது நடவடிக்கை எடுக் கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி எச்சரிக்கை விடுத்துள்ளார். புதுச்சேரி அரசு சார்பில் மக்கள் குரல் என்ற பெயரில் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நெட்டப்பாக்கம் சிவன்கோ யில் திடலில் வியாழனன்று நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குறைதீர்ப்பு முகாமை துவக்கி வைத்தார். மேலும் குறைகூற வந்த மக்களிடம் குறைகளை கேட்டு, நலத்திட்ட உதவி களையும் வழங்கி முதல்வர் நாராயணசாமி பேசிய தாவது, ஜனநாயக நாட்டில் மக்களுக்காகத்தான் அரசு. அரசுக்காக மக்கள் இல்லை. இந்த அடிப்படை தத்து வத்தை கொண்டுதான் மக்களை அவர்களிடத்தில் சென்று சந்தித்து மக்களின் குறைகளை கேட்டறிந்து நிறைவேற்றுவதற்காக கொண்டு வரப்பட்டதுதான் மக்கள் குரல் திட்டம். மக்கள் அளித்த மனுக்க ளில் தீர்வு காண முடிந்தவை களுக்கு ஒன்று அல்லது இரண்டு நாளில் தீர்வு காணப்படும். அதிகபட்சமாக 3 மாதங்களில் தீர்வு காணப் படும். மக்கள் குரலில் அளித்த புகார்களின் மீது நடவடிக்கை எடுக்காத அதி காரிகள் மீது துறை ரீதியி லான நடவடிக்கை எடுக்கப்ப டும் என்றார். இதில் பேரவைத்தலை வர் சிவக்கொழுந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கம லக்கண்ணன், விஜயவேணி எம்.எல்.ஏ., வளர்ச்சி ஆணை யர் அன்பரசு, மாவட்ட ஆட்சி யர் அருண், நலத்துறை செய லர் அலிஸ்வாஸ் மற்றும் அதி காரிகள் கலந்து கொண்ட னர். இந்நிகழ்ச்சியையொட்டி வருவாய்த்துறை, மின் துறை, பொதுப்பணித்துறை, சமூக நலத்துறை உள் ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில் 23 ஸ்டால்கள் அமைக்கப்பட்டு பொதுமக்க ளிடம் குறைகள் கேட்டு சரிசெய்யப்பட்டது.