புதுச்சேரி மற்றும் காரைக்கால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டத்தின் நிலவரப்படி மாவட்ட கலெக்டர்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து வருகின்றனர். அதனை தொடர்ந்து கனமழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.