புதுச்சேரியில் உள்ள 127 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில், கோடை விடுமுறைக்கு பின் மீண்டும் பள்ளிகள் ஜூன் 1 முதல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது விடுமுறை வரும் 7-ஆம் தேதி வரை ஒரு வார காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்ட புதுச்சேரி கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், அம்மாநிலத்தில் உள்ள 127 அரசுப் பள்ளிகளில் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை அமல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், சிபிஎஸ்இ பாடத்திட்ட புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறதாகவும், முதல் கட்டமாக காரைக்கால், மாகே, ஏனாம் பகுதிகளுக்கு பாடபுத்தகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.